Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மிரட்டலான பைக் ரேஸ்...தியேட்டரை தெறிக்க விடும் மாஸ்...வெளியானது அஜித்தின் வலிமை கிலிம்ஸ்
சென்னை : ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாஸாக வெளியிடப்பட்டுள்ள Valimai Glimpse ஐ தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மிரட்டலான பைக் ரேஸ், வலிமை அளவற்ற வலிமை - இதுவே இப்போதைய தேவை என்ற டயலாக்குடன் வெளியாகி உள்ளது வலிமை படத்தின் டீசர். ரஷ்யாவில் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸில் பறக்கும் பைக்குடன் துவங்குகிறது வலிமை டீசர். அதன் பின்னணியில் வில்லனின் வித்தியாசமான வசனம் ஒலிக்கிறது.
நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள். சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் வலை தான் எங்கள் உலகம். அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்...என்ற வசனத்தின் முடிவில் அனல் பறக்கும் தீக்கு நடுவே அஜித் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அர்ஜுன், நீ என் ஈகோவ தொட்டுட்ட. Get Ready for Game என முழங்குகிறார் வில்லன் கார்த்திகேயா.
இதைத் தொடர்ந்து பைக்கில் சீறி பாய்ந்து வரும் அஜித் கூலாக, நான் எப்பவோ கேம் ஆரம்பிச்சாச்சு தம்பி என்கிறார். அது மட்டுமல்ல பல அடுக்கு கட்டிடத்தின் ஒரு கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, மற்றொரு மாடிக்கு பைக்கிலேயே தாவுகிறார் அஜித். அது மற்றொரு சாதனையை முறியடிக்கும் என அஜித் கூறுவதாக இந்த டீசர் முடிகிறது.
இந்த டீசரை போனி கபூர் வெளியிட்ட 15 நிமிடங்களில் ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். வலிமை கிலிம்ஸ் இன்று ரிலீசாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் காலை முதலே அஜித், தல, போனி கபூர், ஹச்.வினோத், வலிமை, வலிமை கிலிம்ஸ் போன்ற ஹாஷ்டாக்குகளை ட்விட்டரில் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.
வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என போனி கபூர் இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீசாகும் பொங்கலுக்கு தான் அஜித்தின் வலிமை படமும் ரிலீசாக உள்ளது. இதனால் தல - தளபதி ரசிகர்கள் இப்போதே மோதிக் கொள்ள துவங்கி விட்டனர்.
இதற்கு முன் வெளியிடப்பட்ட வலிமை ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் சிங்கிள் ஆகியவற்றை தாண்டி தற்போது வெளியிடப்பட்டுள்ள வலிமை கிலிம்ஸ் புதிய சாதனையை எட்டும் என அனைவரும் கணித்துள்ளனர். ஏற்கனவே வலிமை ஃபஸ்ட் சிங்கிள் யூட்யூப்பில் 25 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
இன்னைக்கு பெரிய சம்பவம் காத்திருக்கு.. வலிமை Glimpse இன்று மாலை 6 மணிக்கு வெளியாகப் போகுதாம்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!