வலிமை படத்தின் அடுத்த அதிரடி... கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை படம் கடந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி தொடர்ந்து பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பேமிலி ஆடியன்சும் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.
Recommended Video

அஜித்தின் வலிமை படம்
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டரை ஆண்டுகள் கழித்து வலிமை படம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படம் தொடர்ந்து ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு தள்ளிப் போனது. இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி படம் ரிலீசாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படமும் திரையரங்குகளில் ரிலீசான நிலையிலும் வலிமை படமும் எந்தவிதமான பாதிப்பும் இன்றி தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டில் மட்டும் 92 திரையரங்குகளில் படம் ஓடி வருகிறது.

3வது முறையாக கூட்டணி
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக அஜித், ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணி ஏகே61 படத்திற்காக இணைந்துள்ளது. இந்தக் கூட்டணி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தக் கூட்டணியின் வலிமை படமும் தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

25வது நாளை எட்டிய வலிமை
இந்நிலையில் படம் தற்போது 25வது நாளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதையொட்டி இணையதளத்தை அஜித் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். 25வது நாளை கொண்டாடும் வகையில் பல போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் திரையரங்குகளிலும் இதையொட்டி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்த படங்கள்
அஜித் 61 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில் அடுத்ததாக ஏகே62 படத்திற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது மற்றும் அனிருத் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











