ப்பா.. எவ்ளோ ரிஸ்க்.. வெளியானது வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ... டிவிட்டரை தெறிக்கவிடும் ரசிகாஸ்!
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாடல்கள் ரிலீஸ்
வலிமை படம் அடுத்தாண்டு 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வலிமை படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது

வலிமை மேக்கிங் வீடியோ
இந்நிலையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியானது. இதில் படத்தின் பூஜை முதல் கடைசி பிட் ஆக்ஷன் காட்சிகள் வரை எப்படி படமாக்கப்பட்டது என்பது இடம்பெற்றுள்ளது. கொரோனா கோர அலைக்கு இடையே வலிமை படத்தின் படப்பிடிப்பு எப்படி நடைபெற்றது, படத்தின் ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு ரிஸ்க்குடன் காட்சியாக்கப்பட்டுள்ளது.

உயிரை பணையம் வைத்து..
பார்க்கும் போதே கண்களில் தண்ணீர் வரும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் நடிகர் அஜித் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் உயிரை பணையம் வைத்து நடித்துள்ளதும் இந்த மேக்கிங் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. மானிட்டரில் அவுட் பார்க்கும் போதே வெறித்தனத்துடன் நின்று பார்க்கிறார் நடிகர் அஜித்.

உருக்கமாக சொல்லி...
இதனிடையே படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது, மீண்டும் படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது மற்றும் ரசிகர்கள் அப்டேட் கேட்டு நச்சசரித்தது என படக்குழு எதிர்கொண்ட சவால்களையும் மேக்கிங் வீடியோவில் உருக்கமாக சொல்லி நெகிழ வைத்துள்ளனர்.

ஐ லவ் யூ தல
மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள், #AjithKumar #HVinoth, #ValimaiMakingVideo ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வருகின்றனர். வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்த இந்த ரசிகர், உன் ரசிகனாக நாங்கள் இருப்பது சொல்ல வார்த்தைகள் இல்லை.. ஐ லவ் யூ தல என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











