நாளை HBD.. அஜித்தின் வலிமை படம் குறித்து இன்றே பிரேக்கிங் ஸ்டேட்மென்ட் வெளியிட்ட போனி கபூர்!
சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் இன்றே வலிமை படம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
Recommended Video
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். 1990ஆம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் என்ற படத்தில் பள்ளி மாணவனாக நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானர் அஜித்.
அதனை தொடர்ந்து அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள அஜித், தமிழகமே கொண்டாடும் அளவுக்கு ஒரு உச்ச நடிகராக உயர்ந்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை
பெரும் ரசிகர் படையை வைத்திருக்கும் ஒரு நடிகராகவும் வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் கணக்கே இல்லாமல் சமூக வலைதள ட்ரென்டிங்கில் டாப் இடம் பிடித்து சாதனை படைத்து வருகிறார் அஜித்.

காத்திருக்கும் ரசிகர்கள்
ஹெச் வினோத் இயக்கிய இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதே கூட்டணியில் உருவாகி வரும் படம் வலிமை. வலிமை படத்தில் ஹீரோயினாக ஹியூமா குரோஷி நடிக்கிறார் என தகவல்கள் வெளியானது. இந்தப் படத்தின் அப்டேட் எப்போது வரும் கொண்டாடலாம் என காத்திருக்கின்றனர்.

ஸ்பெஷல் அப்டேட்
மே 1 ஆம் தேதியான நாளை நடிகர் அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதற்காக கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விதவிதமான ஷேர்டேக்குககளை போட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்த நாளில் 'வலிமை' படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஒருமித்த கருத்தோடு
இந்நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் திட்டம்
ஸ்பெஷல் அப்டேட் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு போனி கபூரின் இந்த அறிக்கையும் அறிவிப்பும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. இருப்பினும் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களை தெறிக்கவிட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











