அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை இரண்டாவது சிங்கிள் அப்டேட் இதோ!
சென்னை: இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் வலிமை
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது
வலிமை படத்தின் முதல் சிங்கிள் நாங்க வேற மாறி நாங்க வேற மாதிரி வெளியாகி பட்டையைக் கிளப்பிய நிலையில் இப்பொழுது இரண்டாவது சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

அஜித்துடன் கூட்டணி
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை மற்றும் தீரன்அதிகாரம்ஒன்று உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அஜித்துடன் கூட்டணி அமைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். பொதுவாக ரீமேக் படங்களை இயக்குவதில் பெரிதாக ஆர்வம் இல்லாத வினோத் அஜித்குமார் கேட்டுக் கொண்டதன் காரணமாக ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இயக்கினார்

வலிமை
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவான நேர்கொண்டபார்வை மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்த முறை பக்கா அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு வலிமை என்ற பவர்ஃபுல்லான டைட்டில் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகவும் அதேசமயம் பைக் ரேஸராக பல காட்சிகளில் தோன்ற உள்ளார் எனவும் ஏகப்பட்ட அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

35 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது
பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். காலா புகழ் ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆண்டுக்கணக்கில் வலிமை அப்டேட்டுக்கு காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் வகையில் 6 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின் முதல் சிங்கிள் வேற நாங்க வேற மாறி என்ற அட்டகாசமான ஓபனிங் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. இப்பொழுது இந்தப் பாடல் 35 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

சர்ப்ரைஸாக இரண்டாவது சிங்கிள்
வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் அடுத்த அப்டேட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அட்டகாசமான தகவல் ஒன்று கசிந்துள்ளது அதாவது வலிமை படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சர்ப்ரைஸாக வெளியானதோ அதேபோல இந்தமுறை இரண்டாவது சிங்கிளும் சர்ப்ரைஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











