என்னடா ஃப்ரேமுக்குள்ள மானிட்டர் தெரியுது.. வலிமை பட எடிட்டிங் தவறுகளை சுட்டிக்காட்டிய ரசிகர்கள்!

சென்னை: வலிமை படத்தில் எடிட்டர் கூட சரியாக வேலை செய்யவில்லை என ஏகப்பட்ட எடிட்டிங் தவறுகளை தமிழ் சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹாலிவுட் லெவல் ஃபிலிம் மேக்கிங் என சொன்ன படத்திலா? இத்தனை எடிட்டிங் தவறுகள் இருக்கின்றன என ட்ரோல்களும் பறந்து வருகின்றன.

ஏற்கனவே வலிமை படத்தின் கதை மற்றும் காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் கிளம்பிய நிலையில், நெட்டிசன்கள் சுட்டிக் காட்டியுள்ள எடிட்டிங் மிஸ்டேக்குகள் குறித்து இங்கே பார்ப்போம்.

டிவிடி வந்துடுச்சு

டிவிடி வந்துடுச்சு

வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், 2 வாரங்களே ஆன நிலையிலேயே அதன் ஹெச்.டி. பிரின்ட் டிவிடிக்கள் வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. அதன் காரணமாக பைரசி பிரின்ட்டுகளும் டெலிகிராம் உள்ளிட்டவற்றில் சர்வ சாதாரணமாக பரவி வருகின்றன. வலிமை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் வரும் மார்ச் 25ம் தேதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான எடிட்டிங்

மோசமான எடிட்டிங்

இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு விஜய் வேலுக்குட்டி என்பவர் எடிட்டிங் செய்துள்ளார். தியேட்டருக்கு வந்த ஃபைனல் எடிட்டிங்கிலேயே படம் இரண்டாம் பாதியில் ரொம்ப இழுவையாக இருப்பதாக ரசிகர்கள் கருதிய நிலையில், மீண்டும் 14 நிமிடக் காட்சிகளை படத்தில் இருந்து வெட்டித் தூக்கினர்.

மானிட்டர் தெரியுது

மானிட்டர் தெரியுது

இந்நிலையில், தற்போது வலிமை படத்தில் உள்ள எடிட்டிங் மிஸ்டேக்குகளை தமிழ் சினிமா ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். செயின் ஸ்நாட்சிங் செய்து விட்டு பைக்கில் கொள்ளையர்கள் தப்பிக்கும் ஒரு காட்சியில் ஒரு கேமராவின் பாடி ரிக் மற்றும் மானிட்டரே தெரியும் அளவுக்கு அந்த காட்சி மிகவும் மோசமாக எடிட் செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி அந்த புகைப்படத்தையும் ஷேர் செய்து வருகின்றனர்.

டோர் திறக்கும் முன்பே

மற்றொரு காட்சியில் நடிகர் அஜித் கார் கதவை திறந்து வெளியே வருவதற்கு முன்பாக அவரது கால் முதலில் தெரியும் காட்சி இடம்பெற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் எடிட்டர் கூட இன்ட்ரஸ்டிங்காக வேலை பார்க்கவில்லை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்

கம்ப்யூட்டர் இருந்தும்

கம்ப்யூட்டர் இருந்தும்

கம்ப்யூட்டரில் எடிட்டிங் செய்யும் இந்த காலத்திலேயே இத்தனை மிஸ்டேக்குகள் எப்படி வருகிறது என்றும், கம்ப்யூட்டரே இல்லாமல், ரீல்களை வெட்டி ஒட்டியே மாயாபஜார், நவராத்திரி, மைக்கேல் மதன காமராஜன் என பல படங்களை அப்போதே திறமையாக எடுத்தார்கள். ஆனால், இப்போதெல்லாம் சினிமா மீதான ஆர்வம் இல்லாமல், புராஜெக்டை முடிக்க வேண்டும் என்கிற அழுத்தம் மட்டுமே இருப்பது தான் இதுபோன்ற பிரச்சனைகள் வர காரணம் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X