அஜித் ஃபேன்ஸ் அடுத்த கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...இன்று வலிமை அப்டேட் வருது

சென்னை : அஜித் நடித்த வலிமை படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில், வலிமை படம் பற்றி தினமும் வெளியாகி வரும் தகவல்கள் அஜித் ரசிகர்களை உற்சாகமடைய வைத்து வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் அடுத்த அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Valimai படத்தின் Shooting-ல் தல உடன் நடந்த சுவாரசிய சம்பவம் | H.Vinoth Exclusive

ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஜனவரி 14 வெள்ளிக்கிழமை என்பதால், அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்டிற்காக முதல் நாள் முதல் ஷோவை நள்ளிரவு 1.30 மணிக்கே திரையிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

வலிமைக்கு யுஏ சான்று

வலிமைக்கு யுஏ சான்று

வலிமை படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி உள்ளதாக நேற்று கூறப்பட்டது. யு சான்று கிடைக்கும் என படக்குழு ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், படத்தில் அதிகமான சண்டைக்காட்சிகள் உள்ளது மற்றும் போதைப் பொருள் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு யுஏ சான்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் நேரம் எவ்வளவு

படத்தின் நேரம் எவ்வளவு

இருந்தாலும் சென்சார் ஒப்புதல் கிடைத்து விட்டதால் வலிமை திட்டமிட்டபடி ரிலீசாவது உறுதியாகி விட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக அதிக ஆக்ஷன் காட்சிகளுடன் வலிமை படத்தின் இரண்டு மணி நேரம் 50 நிமிட காட்சிகள் எதுவும் குறைக்கப்படவில்லையாம். ரிலீசாவதற்கு முன் வியாபாரத்திலேயே வலிமை படம் போட்ட தொகையை திரும்ப எடுத்ததுடன், கூடுதல் லாபத்தையும் பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

எத்தனை கோடி வியாபாரம்

எத்தனை கோடி வியாபாரம்

வலிமை படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.150 கோடி. இந்த படத்திற்காக அஜித்திற்க சம்பளமாக மட்டும் ரூ.70 கோடி கொடுக்கப்பட்டதாம். தியேட்டர் உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம், டிஜிட்டல் உரிமம், சேட்டிலைட் உரிமம் உள்ளிட்டவைகளின் வியாபாரம் ரூ.161 கோடிக்க நடைபெற்றுள்ளது. இதனால் பட்ஜெட் தொகையை தொடர்ந்து ரூ.11 கோடி லாபமாக கிடைத்துள்ளதாம்.

இது தான் அடுத்த அப்டேட்

இது தான் அடுத்த அப்டேட்

இது போன்ற வலிமை பற்றிய அடுத்தடுத்த தகவல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், வலிமை படத்தின் அடுத்த அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அப்டேட் படத்தின் இசை அல்லது தீம் தொடர்பானதாக இருக்கும் என்றும், ப்ரோமோ அல்லது தகவல் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எப்போது வரும்

எப்போது வரும்

வலிமை படத்தின் விசில் தீம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ரிலீசாகும் என சோனி மியூசிக் சவுத் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள் வலிமை தீம்மிற்காக

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X