உலகிலேயே மிகப் பெரிய திரையரங்கில் வெளியாகும் வலிமை.. எங்கே தெரியுமா...? மாஸ் காட்டும் படக்குழு!

சென்னை: நடிகர் அஜித் குமார் பைக் ரேஸராக நடித்து மிரட்டியுள்ள திரைப்படம் வலிமை.

ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்

முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள வலிமை வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்க உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கில் இப்படம் ரிலீசாகிறது.

பைக் ரேஸராக

பைக் ரேஸராக

இந்திய சினிமா இதுவரை எந்த ஒரு படத்திற்கும் கண்டிராத மிகப் பெரிய எதிர்பார்ப்பை வலிமை பெற்றுள்ளது. வலிமை அப்டேட் கிடைக்கவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் பைக் ரேஸராக நடித்து வருகிறார். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என தனது ஒவ்வொரு படைப்புகளிலும் ரசிகர்களை பிரமிக்க வைத்த இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இரண்டாவது முறையாக

இரண்டாவது முறையாக

ஹெச் வினோத் மற்றும் அஜித் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான நேர்கொண்ட பார்வையில் அஜித் வக்கீலாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். நேர்கொண்ட பார்வை அனைத்து தரப்பு மக்களிடமும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது இப்பொழுது அஜித் மற்றும் ஹெச் வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள வலிமை இந்திய அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன்

கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் குமார் இந்த படத்தில் பைக் ரேஸராக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன் என வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கும் ஹுமா குரேஷி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ரஜினிகாந்த்தின் காலாவில் ஜரினா என்ற ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கில் ரிலீஸ்

உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கில் ரிலீஸ்

தெலுங்கில் இளம் நடிகராக உள்ளார் கார்த்திகேயா வலிமை படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப் பட்டதால் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உலகமெங்கிலும் இப்படம் ஒரே நாளில் ரிலீசாகிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 95% திரையரங்குகள் வலிமை படத்தை ரிலீஸ் செய்கிறது. இந்த நிலையில் உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கு பிரான்சில் உள்ள லெ க்ராண்ட் திரையரங்கில் வலிமை வெளியாகிறது என்ற அட்டகாசமான அப்டேட்டை நடிகை ஜான்வி கபூர் கொடுத்துள்ளார் . இந்தியாவை தொடர்ந்து வெளிநாடுகளிலும் வலிமை கவனம் பெற்று வருவது அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X