வந்தது அடுத்த அப்டேட்.. 'தல' அஜித்தின் வலிமை ஷூட்டிங் எப்போது? படக்குழு தகவல்.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வலிமை படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து இதையும் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

ஹூமா குரேஸி
ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்தி தயாரிப்பாளருமான, போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

படப்பிடிப்பு
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பாவும் வில்லனாக நடிக்கிறார். வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

கொரோனா காரணமாக
பின்னர் கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட இருப்பதாகவும் இதற்காக வெளிநாடு செல்வது என்றும் படக்குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் சென்னை அல்லது இந்தியாவில் அதை எடுத்துக்கொள்ளலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷுட்டிங்கிற்கு அனுமதி
இதற்கிடையே 75 பேரை வைத்து சினிமா படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம் என்று அரசு ஷுட்டிங்கிற்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சில இயக்குனர்கள் தங்கள் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளனர். ஆனால், பெரிய ஹீரோ நடிக்கும் படங்களின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.
Recommended Video

21 ஆம் தேதி
இதற்கிடையே நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதம் முதல்வாரம் தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், வரும் 21 ஆம் தேதி இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இதில் அஜித் இல்லாத காட்சிகளை படக்குழு எடுக்க இருக்கிறது. சில நாட்கள் அஜித்தும் கலந்துகொள்வார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











