விஸ்வாசம் செண்டிமெண்ட்.. வலிமை படப்பிடிப்பு எங்க, எப்போ நடக்கப் போகிறது தெரியுமா?
வலிமை படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.
சென்னை: வலிமை படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. ரசிகர்கள் மீது அக்கறை காட்டுவதில் அஜித்துக்கு நிகர் அஜித் தான்.

ரசிகர்களை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ள கூடாது என நினைக்கக்கூடியவர் அஜித். அதன் காரணமாகவே தனது ரசிகர் மன்றங்களை ஒரேடியாக கலைத்துவிட்டார். இதன் மூலம் தனது ரசிகர்கள், மற்ற பயன் தரும் விஷயங்களில் ஈடுபட முடியும் என்பதாலேயே இந்த முடிவை அவர் எடுத்தார்.
இருப்பினும் அஜித்தின் ரசிகர்கள் வட்டம் குறைந்த பாடில்லை. விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் போடும் சண்டையில் பல நேரங்களில் டிவிட்டர் கதிகலங்கி போய் இருக்கிறது. அஜித் படத்தின் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும், அங்கு செல்வதை அஜித் ரசிகர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் அவ்வாறு செலவழித்து தன்னை தேடி வந்து பார்ப்பதை அஜித் விரும்புவதில்லை.
இதன் காரணமாகவே வலிமை படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விஸ்வாசம் படத்தின் ஒரு பதிவு அங்கு தான் படமாக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த படப்பிடிப்பும் அங்கு தான் நடந்தது.
வலிமை படத்திற்காக ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்ள இருக்கிறார். அங்கு படப்பிடிப்பு முடிந்த பிறகு, படக்குழு வெளிநாடு பறக்க உள்ளது.
வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அவருக்கு நிறைய சண்டைக்காட்சிகள் இருக்கிறதாம். வலிமை படத்தின் நடிகர், நடிகையர் குறித்த முழு விவரம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











