ஷூட்டிங் முடிவதற்குள்ளேயே விற்பனையான அஜித்தின் வலிமை படம்.. போனி கபூரின் வேற லெவல் அப்டேட்!
சென்னை: ஷூட்டிங் முடிவதற்குள்ளேயே அஜித்தின் வலிமை படம் தமிழகத்தில் விற்பனையாகியுள்ளது.
ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை.
பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

ஆகஸ்ட்டில் ரிலீஸ்
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் முக்கியமான சண்டைக்காட்சியை வெளிநாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் வலிமை படத்தை வரும் ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளது.

தியேட்டர் ரிலீஸ்
இந்நிலையில் வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை விற்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை, ராகுலின் ரோமியோ பிக்சர்ஸும், அன்பு செழியனின் கோபுரம் சினிமாஸும் பெற்றுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இதனை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விலமை படத்தின் இந்த அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படப்பிடிப்பு முடிவதற்குள்ளேயே ரிலீஸ் உரிமை விற்கப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மே 1ஆம் தேதி அப்டேட்
இதனிடையே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் 50வது பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இந்தப் படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











