தமிழ்நாட்டையே தெறிக்க விட்ட ஆளுமா டோலுமா.. 4ம் ஆண்டு கொண்டாட்டத்தில் வேதாளம்!

சென்னை: வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம், இன்றுடன் 4ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. காலை முதலே 'தல' ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வேதாளம் 4ம் ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றனர்.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல கலெக்‌ஷனை பெற்று அசத்தியது அஜித்தின் வேதாளம்.

அந்த படத்தில் இடம்பெற்ற ஆளுமா டோலுமா பாடல், இன்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் இளைஞர்களை குத்தாட்டம் போட வைக்கும் மந்திர பாடலாக அரங்கேறி வருகிறது.

லாரன்ஸ் தந்த பரிசு

லாரன்ஸ் தந்த பரிசு

ராகவா லாரன்ஸின் வேதாளம் டைட்டிலை, அஜித்துக்காக சிறுத்தை சிவா கேட்டபோது, உடனடியாக ஓகே என்று சொல்லி கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். தன்னை விட தல அஜித்துக்கு அந்த டைட்டில் மாஸ் காட்டும் என அவர் நம்பியது வீண் போகவில்லை.

சொல்லி அடித்த அனிருத்

தளபதி விஜய்க்கு கத்தி படத்தில் சூப்பர் ஹிட் ஆல்பத்தை கொடுத்த அனிருத் அதற்காக விருது வாங்கும் போது, விருது விழா மேடையில், அடுத்தது 'தல' அஜித்துக்கு போடும் பாடலுக்காகவும் இந்த விருதை வாங்குவேன் எனக் கூறினார். அவர் கூறியது போல, வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆளுமா டோலுமா பாடலுக்காக அடுத்த ஆண்டும் அனிருத் சிறந்த இசையமைப்பாளர் விருதினை தட்டிச் சென்றார்.

அந்த சிரிப்பு

வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு அழுது தவிப்பது போல நடித்து விட்டு, அப்படியே இறுதியில் சிரித்தவாறு டிரான்ஸ்ஃபார்ம் ஆகும் அஜித்தின் நடிப்பு இணையத்தில் வைரலாக பரவியது. மேலும், பல ட்ரோல் வீடியோக்கள் மற்றும் மீம்களுக்கு அந்த சிரிப்பு வீடியோ உதவியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

காப்பி

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஷ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருப்பார். சரத்குமார் நடிப்பில் வெளியான 'ஏய்' படத்தின் காப்பி என அஜித் ஹேட்டர்ஸ் விமர்சித்து வந்தனர். மேலும், வேதாளம் படத்தில் அஜித், அமைதியான டாக்ஸி டிரைவராக நடித்திருப்பார். அது அப்படியே, பாட்ஷா படத்தில் அமைதியான ஆட்டோக்காரராக ரஜினி நடித்திருப்பதை காப்பி செய்ததாகவும் பல மீம்கள் பரவின.

தெறிக்க விடலாமா

2015ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வெளியான வேதாளம் படம், இன்றோடு 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த கொண்டாட்டத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சோனி மியூசிக் செளத், வேதாளம் படத்தின் பாடல்கள் அடங்கிய ஜூக் பாக்ஸ் லின்க்கை ஷேர் செய்து தெறிக்க விடலாமா எனக் கேட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X