»   »  பெரும் தொகைக்கு விலை போனதா அஜீத்தின் "வேதாளம்" விநியோக உரிமை?

பெரும் தொகைக்கு விலை போனதா அஜீத்தின் "வேதாளம்" விநியோக உரிமை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடிப்பில் உருவாகி வரும் "வேதாளம்" படம் பெரிய ஒரு தொகைக்கு விற்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் சூரி ஆகியோர் நடித்து வரும் படம் வேதாளம். கடந்த வாரம் படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு அஜீத்தின் வேதாளம் படம் விலை போயிருக்கிறது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேதாளம்

வேதாளம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்,சுருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் சூரி நடிக்கும் வேதாளம் படத்தின் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப்படத்தை தீபாவளிநாளில் வெளிக்கொண்டு வரத்திட்டமிட்டு படக்குழுவினர் வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டும்

தமிழகத்தில் மட்டும்

வேதாளம் படத்தின் தமிழக விநியோக உரிமை மட்டும் சுமார் 40 கோடிகளுக்கு விலை போயிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் வெளிநாட்டு உரிமை மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியன இந்தக்கணக்கில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான அஜீத்

வித்தியாசமான அஜீத்

அஜீத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக்குடன் கடந்த வாரம் வெளியான வேதாளம் திரைப்படம் அஜீத் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் அஜீத் 2 வேடங்களில் நடிக்கிறார் என்றும் இல்லையில்லை ஒரு அஜீத் தான் என்றும் இருவேறு விதமான கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் நிலவுகின்றன.

பிளாஷ்பேக்

பிளாஷ்பேக்

வேதாளம் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் அஜீத் மொட்டைத்தலை கெட்டப்புடன் வருவார் என்று கூறுகின்றனர். மேலும் இந்தப் படத்தில் அஜீத் நல்லவன் மற்றும் தீயவன் என்று இருவேறு விதமான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறாராம்.

தீபாவளி வெளியீடாக வேதாளம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Latest Buzz in Kollywood Ajith's Vedhalam Movie Rights Sold for Huge Amount. In Tamilnadu the movie rights sold for 40 Crores(app).
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil