காய்ச்சலோடு மழையில் ஆடிய அஜீத்: 1800 பிரிண்டுகளில் 'வீரம்'
சென்னை: வீரம் படத்தில் ஒரு பாடலுக்கு அஜீத் குமார் காய்ச்சலோடு மழையில் டான்ஸ் ஆடினாராம்.
வீரம் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. படத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுத்த இயக்குனர் சிவாவுக்கு தயாரிப்பாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி கூறுகையில்,

100 ஏக்கரில் செட்
ஒட்டன்சத்திரத்தை மையமாகக் கொண்டு வீரம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரிஸா அருகே 100 ஏக்கரில் பிரமாண்ட செட் போட்டு படத்தை எடுத்தோம்.

மழை பாடல்
அஜீத் மழையில் நனைந்தபடி ஆடும் ஒரு பாடலை படமாக்கவிருந்தனர். அப்போது அஜீத்துக்கு காய்ச்சல் வந்துவிட்டது. இருப்பினும் அவர் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மழையில் டான்ஸ் ஆடினார்.

சுவிட்சர்லாந்தில்
அஜீத், தமன்னா ஆடும் பாடல் உள்பட 2 பாடல்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பாடலுக்கு 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் நடனம் ஆடியுள்ளனர்.

1800 பிரிண்டுகள்
வீரம் படம் 1800 பிரிண்டுகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜீத்தின் படங்களிலேயே அதிக பிரிண்டுகளில் வெளியாகும் படம் வீரம் தான் என்றார் ரெட்டி.

சென்சார்
ஜனவரி முதல் வாரத்தில் வீரம் படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காடப்படுகிறது. ஆரம்பம் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











