தெலுங்கு பேசப்போகும் வீரம்...அஜீத் வேடத்தில் பவன் கல்யாண்?

By Manjula

ஹைதராபாத்: அஜீத் நடிப்பில் கடந்த 2014 ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றிபெற்ற வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத், தமன்னா, விதார்த், பாலா மற்றும் பலர் நடிப்பில் 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் வீரம்.

Ajith's Veeram Remade in Telugu?

அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சிவா - அஜீத் கூட்டணியில் முதன்முறையாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

தற்போது சர்தார் கப்பர் சிங் படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் சமீபத்தில் வீரம் படத்தைப் பார்த்து இதின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.

சர்தார் கப்பர் சிங், குஷி 2 படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்க, மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தைத் தயாரித்த மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X