Vidaamuyarchi :'வி' முதலெழுத்தை விடாத அஜித்.. வீரம், விவேகம், விஸ்வாசம் வரிசையில் விடாமுயற்சி!
சென்னை : நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் அவரது ஏகே62 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி என்று அவரது படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பூடானில் உள்ள அஜித், தனது பைக் ரைடை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். மிகச்சாதாரணமாக சாலைகளில் படுத்து தூங்குவதும் சாதாரண உணவகங்களில் சாப்பிடுவதுமாக அவரது புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

வி எழுத்தை விடாத அஜித் :நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே62 படத்தின் அறிவிப்பை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இந்த ப்ராஜெக்ட்டிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்றைய தினம் அஜித்தின் பிறந்தநாளையொட்டி தற்போது இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்திற்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பூடானில் பைக் டூரில் அஜித் உள்ள நிலையில், விரைவில் சென்னை திரும்பவுள்ளார். தொடர்ந்து இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம். பிறந்தநாளிலும் சாதாரண மனிதராக பூடான் வீதிகளில் படுத்துத் தூங்கியும் சாதாரண உணவகங்களில் சாப்பிட்டும் வரும் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனிடையே இந்த முறையும் வி என்ற எழுத்தில்தான் தன்னுடைய படத்தின் டைட்டிலை வைத்துள்ளார் அஜித். முன்னதாக வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என இவரது படங்களின் டைட்டில் இருந்த நிலையில், அந்தப் படங்கள் எல்லாமே அவருக்கு சிறப்பான வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்நிலையில் மீண்டும் வி என்ற எழுத்தில் துவங்கும் விடாமுயற்சி என்ற டைட்டிலை அவர் தன்னுடைய படத்திற்கு வைத்துள்ளார்.
சென்டிமெண்ட்டாக அவர் வி எழுத்தில் டைட்டிலை தொடர்ந்து வைத்துவரும் நிலையில், இந்தப் படமும் மிகச்சிறப்பாக அவருக்கு கைக்கொடுக்கும் என்று நம்பலாம். படத்தின் டைட்டில் அறிவிப்பை தொடர்ந்து, இது தன்னுடைய கனவு நனவான தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் மகிழ் திருமேனி, சிறப்பான சம்பவம் லோடிங் என்றும் கூறியுள்ளது படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











