17 வருடங்களை நிறைவு செய்த வில்லன்.. டிவிட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்! #17YrsOfMegaBBVillain
சென்னை: வில்லன் படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
வில்லன் திரைப்படம் 2002ஆம் ஆண்டு ரிலீஸானது. இதில் நடிகர் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு அஜித் பஸ் கன்டெக்டராகவும், மற்றொரு அஜித் மாற்றுத்திறனாளி வேடத்திலும் நடித்திருப்பார்.
இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை மீனா நடித்தார். நடிகை கிரண், அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். அவர்களை தவிர ரமேஷ் கண்ணா, சுஜாதா என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

படத்தின் கதை
ஒரு பெற்றோர், வறட்டு கவுரவத்திற்காக தங்களின் இரட்டை குழந்தைகளில் ஒன்றான மாற்றுத்திறனாளி குழந்தையை மறைத்து வளர்ப்பார்கள். பாரபட்சமாகவும் நடத்துவார்கள். இதனை அடிப்படையாக கொண்டு படம் காட்சியாக்கப்பட்டிருக்கும்.

வைரமுத்து வரிகள்
வித்தியாசாகர் இசையில் இடம் பெற்ற 7 பாடல்களும் செம ஹிட். இந்த 7 பாடல்களையுமே கவிஞர் வைரமுத்துதான் எழுதியிருந்தார்,

பிளாக் பஸ்டர் படம்
இந்தப்படம் பல தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் பிளாக் பஸ்டர் படங்களில் வில்லன் படம் முக்கியமான ஒன்று.

கொண்டாடும் ரசிகர்கள்
இந்நிலையில் வில்லன் படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

ட்ரென்டிங்கில் டாப்
17YrsOfMegaBBVillain என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் உருவாக்கி ட்ரெட்ன்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.
உனக்கு தெரியாது
வில்லன் படத்திலிருந்து மாஸ் டயலாக்.. நா மெழுகுவர்த்தி மாதிரி, நெருப்புக்கு பயந்தா முடியுமா!?
என்ன கொளுத்துனாலும் எனக்கு எரியாது, அதால யாருக்கு வெளிச்சம்னு உனக்கு தெரியாது..! என்ற டயலாக்கை பதிவிட்டிருக்கிறார் இந்த ரசிகர்.
அஜித்துக்கு சிறந்த படம்
அஜித் கேரியரிலேயே சிறந்த படம் வில்லன் என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











