twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட விஸ்வாசம் பட பாடல்... குஷியில் அஜித் ரசிகர்கள்!

    |

    சென்னை : நடிகர் அஜித்குமார் இதுவரை பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் சிறுத்தை சிவாவுடன் இணைந்து தொடர்ந்து நான்கு படங்களில் நடித்திருந்தது ஒட்டுமொத்த திரை உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

    சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் கடைசியாக வெளியான விஸ்வாசம் மாபெரும் வசூலை அள்ளியது. மேலும் இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு டிஆர்பியிலும் முன்னிலை வகித்தது.

    தெரிஞ்சுதான் இந்த மாதிரி போடுறீங்களா? பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்! தெரிஞ்சுதான் இந்த மாதிரி போடுறீங்களா? பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்!

    இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற நிலையில் அதற்காக இசையமைப்பாளர் டி இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது "அடிச்சு தூக்கு பாடல்" நூறு மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்துள்ளது.

    நான்கு படங்கள்

    நான்கு படங்கள்

    நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வரும் அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வரும் நிலையில் சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்றிய நான்கு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தன. வீரம் மூலம் இணைந்த அஜித் சிறுத்தை சிவா கூட்டணி அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு படங்களில் இணைந்து பணியாற்றி ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்த விஸ்வாசம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இதில் நடிகர் அஜித் கிராமத்து விவசாயியாக நடித்திருக்க இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருப்பார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும் ஒரு கட்டத்தில் அஜித்தின் அடிதடி சண்டை சச்சரவுகள் பிடிக்காமல அஜித்தை வீட்டு பிரிய அவருடன் மகளையும் அழைத்து சென்றுவிடுகிறார். மனைவி மீண்டும் திரும்பி வருவார் என எதிர்பார்த்த அஜித்துக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதால் வேறு வழியில்லாமல் நேரடியாக மனைவியை சென்று பார்த்து மனைவியையும் மகளையும் சொந்த ஊருக்கு கூட்டி வரவேண்டும் என்ற எண்ணத்தில் சிட்டிக்கு சென்று அங்கே எவ்வாறு மனைவியுடனும் மகளுடனும் இணைகிறார் என்பதே படத்தின் கதையாக அமைந்திருந்தது.

    டிஆர்பி-யில் முன்னிலையில்

    டிஆர்பி-யில் முன்னிலையில்

    அனைவருக்கும் பரிச்சயமான மிக எளிமையான கதை தான் என்றாலும் காட்சிக்கு காட்சி ரசிக்கும்படி புதுமையாக காட்டியது ரசிகர்களை கவர்ந்து இருந்தது . என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மீண்டும் அனிகா சுரேந்திரன் இப்படத்தில் அஜித்குமாருக்கு குழந்தையாக நடித்திருந்தார் . இருவரின் கெமிஸ்ட்ரியும் முதல் படத்திலேயே சிறப்பாக அமைந்திருக்க விஸ்வாசம் படத்தில் அனைவரும் உண்மையான தந்தை மகள் எனவே கருதினர் .குறிப்பாக இத்திரைப்படத்தில் தந்தை மகள் பாசம் கூடுதலாக சேர்க்கப்பட்டதால் மக்கள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்க்க கூடினர். பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட்ட விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலை கலெக்ட் செய்தது. இது மட்டுமா என்றால் இல்லை இன்றுவரை விஸ்வாசம் திரைப்படம் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும் டிஆர்பி-யில் அதுதான் முன்னிலையில் வகித்து வருகிறது. தமிழ் நாட்டில் தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் கன்னட மொழியில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட்டடித்தது. கன்னட தொலைக்காட்சியிலும் விஸ்வாசம் திரைப்படம் டி ஆர் பி- யில் முன்னணியில் வகிக்கிறது.

    சூப்பர் ஹிட் பாடல்கள்

    சூப்பர் ஹிட் பாடல்கள்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து இருக்க அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. குறிப்பாக தந்தை மகள் பாசத்தை குறிப்பிடுகின்ற வகையில் உருவான " கண்ணான கண்ணே" மிகப்பெரிய சாதனையை படைத்தது. அதைத் தொடர்ந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாக அமைந்தது. வேட்டி கட்டு மற்றும் யானே யானே ஆகிய பாடல்களும் பெஸ்ட் ஆஃப் தி இயர் என்ற பெயரை பெற்றிருந்தது. இதில் கண்ணான கண்ணே ஏற்கனவே 100 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்துள்ள நிலையில் இப்பொழுது விஸ்வாசம் படத்திலிருந்து மற்றொரு பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை தொட்டுள்ளது. அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் குத்தாட்டம் என்றால் கட்டாயம் ஒலிக்கக் கூடிய பாடலாக "அடிச்சு தூக்கு" இருந்து வருகிறது. இப்பொழுது இந்த பாடல்தான் யூட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்துள்ளது. விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி இமானுக்கு சமீபத்தில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் ஒரு மகிழ்ச்சியான விஷயமாக விஸ்வாசம் பாடல் 100 மில்லியன் பார்வைகளை தொட்டு நிஜமாகவே அடிச்சு தூக்கியுள்ளது.

    100 மில்லியன்

    100 மில்லியன்

    சிறுத்தை சிவாவுடன் இணைந்து வீரம், விவேகம்,வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றிய நடிகர் அஜித் அதன் பிறகு இப்பொழுது ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்த சீரிஸை தொடங்கியுள்ளார். அதன்படி நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறையாக வலிமை படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் சமீபத்தில் நாங்க வேற மாதிரி என்ற முதல் பாடல் வெளியாகிப் பட்டையை கிளப்பியது. வலிமை வரும் பொங்கலுக்கு வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அடிச்சு தூக்கு பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதைக் கேட்டு மேலும் மகிழ்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

    English summary
    ajith starring vishwasam movie adichu thooku song makes new record in youtube. this song receives 100 million views. already kannana kannae song from this movie gets 100 million views. ajith fans celebrates this mega record.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X