டிஆர்பியில் புதிய சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்... சர்காரை பின்னுக்கு தள்ளியது!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட விஸ்வாசம் திரைப்படம், டிஆர்பியில் புதிய சாதனை படைத்துள்ளது.
அஜித், நயன்தாரா, ஜகபதிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ரிலீசான தேதியில் இருந்து முதல் ஆறு வாரங்கள் வரை அரங்குகள் நிறைந்த காட்சியாக விஸ்வாசம் ஓடியது. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அனைவருக்கும் இந்த படம் நல்ல லாபத்தை பெற்றுத் தந்தது.
விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இப்படம் கடந்த வாரம் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தையொட்டி ஒளிபரப்பப்பட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு விஸ்வாசம் படத்துக்கு அதிக டிஆர்பி கிடைத்துள்ளது. அதாவது, அதிகபடியான மக்கள் விஸ்வாசம் படத்தை சன் டிவியில் பார்த்திருக்கின்றனர். இந்த படத்தை 18.1 மில்லியன் பேர், அதாவது ஒரு கோடியே 81 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இதுவரை திரையிடப்பட்ட படங்களில் விஸ்வாசம் தான் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, பிச்சைக்காரன் படமும், அடுத்த இடத்தில் பாகுபலி 2ம், 4வது இடத்தில் சர்கார் திரைப்படமும் உள்ளன.
இதனால் அஜித் ரசிகர்கள், விஸ்வாசம் திரைப்படம் டிஆர்பியிலும் சர்கார் படத்தின் சாதனையை முறியடித்துவிட்டது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











