சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருடத்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்
சென்னை: சன் டிவியில் அஜித்தின் விஸ்வாசம் படம் ஒளிபரப்பாவதை அடுத்து, அதை ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
அஜித்குமார், நயன்தாரா, ஜெகபதிபாபு, விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உட்பட பலர் நடித்து கடந்த வருடம் ஜனவரியில் வெளியான படம், விஸ்வாசம். சிவா இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்திருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது.
சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம் போன்ற படங்கள் சுமாரான வெற்றியை பதிவு செய்தது.

சூப்பர் ஹிட்
விமர்சனங்களும் அந்தப் படங்களுக்கு மோசமாக எழுந்த நிலையில், அதை மறக்கடிக்கும் விதமாக விஸ்வாசம் படம் பொங்கல் என்டர்டெயினராக ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது.

விருதுகள்
சமீபத்தில் நடந்த ஜீ தமிழ் சினிமா விருது விழாவில் சிறந்த பொழுதுபோக்கு படம், சிறந்த நடிகை உள்ளிட்ட 7 விருதுகளை விஸ்வாசம் தட்டிச் சென்றது. பல வருடங்களுக்கு பிறகு அஜித்தின் படத்திற்கு பல தரப்பில் இருந்தும் விருதுகள் குவிகின்றன.

ரசிகர்கள்
பேட்ட படத்துடன் கடந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆனபோதும் டிரெண்டிங் ஆனது. ஒரு வருஷம் நிறைவான அன்று #1yearofviswasam என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டாக்கி இருந்தனர்.
ஹாஷ்டேக்
இந்நிலையில், இந்தப் படம் சன் டிவியில் இன்று ஒளிப்பரப்பாகி வருகிறது. இதையடுத்து #TRPHunterVISWASAMOnSunTv என்ற ஹாஷ்டேக்கையும் #விஸ்வாசம் என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி அஜித் ரசிகர்கள் இப்போது டிரெண்டாக்கி வருகின்றனர்.
பல வீடுகளில்
தமிழ் நாட்டின் பல வீடுகளில் விஸ்வாசம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய டிஆர்பி ரேட்டிங் சன் டிவிக்கு கிடைக்கும் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எத்தனை முறை
இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு போரடிப்பதே இல்லை. அப்பா-மகள் உறவை சிறப்பாக சொன்ன படங்களில் இதுவும் ஒன்று தெரிவித்துள்ளார் ஒரு ரசிகர்.


Click it and Unblock the Notifications











