இன்று ஆயிரத்துக்கும் அதிகமான திரைகளில் அமர்க்களமாக ரிலீசாகிறது அஜித் குமாரின் விவேகம்!
தமிழகத் திரையரங்குகளுக்கு இன்று கொண்டாட்ட நாள். அஜித்தின் 57வது படமான விவேகம் இன்று ஆயிரத்துக்கும் அதிகமான அரங்குகளில் உலகெங்கும் வெளியாகிறது.
சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், சிவா இயக்கியுள்ள படம் விவேகம். இந்தப் படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இன்று ரிலீஸ்
வழக்கமாக வெள்ளிக்கிழமைதான் புதிய படங்கள் வெளியாகும். ஆனால் அஜித் படங்கள் மட்டும் ஒரு நாள் முன்பாகவே வெளியாகிவிடும். நாளை விநாயகர் சதுர்த்தி. இன்றே வெளியாகிவிட்டது விவேகம்.

1000 க்கும் அதிகமான அரங்குகள்
உலகம் முழுவதும் இன்று 1000-க்கும் அதிகமான அரங்குகளில் விவேகம் வெளியாகிறது. சில அரங்குகளில் சில மணி நேரங்கள் முன்னதாகவே வெளியாகிவிட்டது விவேகம்.

தமிழகத்தில்
தமிழகத்தில் மட்டும் 550 அரங்குகளில் விவேகம் வெளியாகிறது. திருச்சியில் எந்திரனுக்குப் பிறகு அதிக அரங்குகளில் வெளியாகும் படம் விவேகம்தான்.

ரசிகர்கள் உற்சாகம்
விவேகம் படத்தை அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர். தாரை தப்பட்டை, வெடி என முதல் காட்சிக்கு அத்தனை திரையரங்குகள் முன்பும் இப்போதே ஆர்ப்பரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











