விவேகம்... மலேசியாவில் மட்டும் 109 மால்களில் 700 திரைகள்!

By Shankar

விவேகம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் அனைத்தும், இந்தப் படம் அஜித்தின் கேரியரில் பல சாதனைகளைப் படைத்துள்ளதை அறிவிப்பதாக உள்ளது.

இதுவரை அஜித் படங்களுக்கான மார்க்கெட் வேறு, விவேகம் படத்தின் வியாபாரம் காட்டியிருக்கும் மார்க்கெட் வேறு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கிட்டத்தட்ட ரூ 100 கோடி பட்ஜெட்

கிட்டத்தட்ட ரூ 100 கோடி பட்ஜெட்

சிவா இயக்கத்தில் அஜித் மூன்று தோற்றங்களில் நடித்துள்ள விவேகம் படம்தான், அவர் கேரியரில் அதிகபட்ச பட்ஜெட் கொண்ட படமாகும். கிட்டத்தட்ட ரூ 100 கோடியை விழுங்கியுள்ளது இந்தப் படம்.

பல்கேரியாவில்...

பல்கேரியாவில்...

படத்தின் 90 சதவீத ஷூட்டிங் பல்கேரியாவின், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிராத பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் பார்க்கும்போதே இது தமிழ்ப் படமா, ஹாலிவுட் படமா என்ற கேள்வியை ஏற்படுத்திவிட்டது.

விற்பனை

விற்பனை

விவேகம் படத்தின் விநியோக உரிமை விற்பனை அஜித்தின் கேரியரில் இன்னொரு மைல்கல். தமிழத்தில் மட்டும் ரூ 50 கோடிக்கு விற்பனையாகியுள்ளது இந்தப் படம். பிற மாநில உரிமை, வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை அனைத்தும் சேர்த்து ரூ 100 கோடியைத் தொடுகிறது விவேகம்.

மலேசியாவில் சாதனை ரிலீஸ்

மலேசியாவில் சாதனை ரிலீஸ்

இந்தப் படம் உலகெங்கும் நாளை வெளியாகிறது. மலேசியாவில் மட்டும் 109 மால்களில் 700 திரைகளில் ரிலீஸ் ஆகிறது. அஜித் படங்களைப் பொறுத்தவரை இது பெரிய சாதனையாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X