»   »  அதிக லைக்குகள்.... கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்!

அதிக லைக்குகள்.... கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதிக லைக்குகள் பெற்றதில் ரஜினியின் கபாலியை மிஞ்சியது அஜித்தின் விவேகம்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. இந்தப் படத்தின் டீசருக்கு வரலாறு காணாத வரவேக்பு கிடைத்தது. இதுவரை 3 கோடியோ 41 லட்சம் பார்வைகள் இந்த டீசருக்குக் கிடைத்துள்ளன. எந்தத் தமிழ்ப் படமும் நிகழ்த்தாத சாதனை இது. அதே போல 4.64 லட்சம் லைக்குகளைப் பெற்றது முதலிடத்தில் இருந்தது கபாலி.

Ajith's Vivegam teaser set new record

கடந்த மே மாதம் 10ம் தேதி வெளியான அஜித்தின் விவேகம் பட டீசர் அதிக லைக்குகள் பெற்றதில் கபாலியை முந்தியுள்ளது. இந்த டீசருக்கு கடந்த மூன்று மாதங்களில் 1.9 கோடி பார்வைகளும், 5.27 லட்சம் லைக்குகளும் கிடைத்துள்ளன. அதே போல 77 ஆயிரம் பேருக்கும் மேல் டீசருக்கு டிஸ்லைக் கொடுத்துள்ளனர்.

யுட்யூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்ற வகையில் விவேகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் அதிக பார்வைகள் என்ற கணக்கில் இன்னமும் கபாலிதான் முதலில் உள்ளது.

English summary
Ajith's Vivegam teaser is set a new record in getting huge likes in youtube
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil