பராசக்தி பார்த்த அஜித் மனைவி ஷாலினி.. அவங்க விமர்சனம் இதுதான்?.. சூப்பரா சொல்லிட்டாங்க
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். சென்சார் சொன்ன திருத்தங்களுடன் வெளியான படத்தை அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி பார்த்தார். பார்த்த பிறகு தனது கருத்தையும் சொல்லியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா. முதன்முறையாக எஸ்கேவுடன் சுதா இணைந்திருப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. இதில் சிவாவுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பிருத்வி, சேத்தன் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷுக்கு இது நூறாவது படம், சிவாவுக்கு 25ஆவது படம். இப்படி பல சிறப்புகளை கொண்டு உருவாகியுள்ளது படம்.
இன்று ரிலீஸான படம்: ஹிந்தி திணிப்புதான் படத்தின் மையக்கரு என்பதால் சென்சார் அதிகாரிகளின் கத்தரி அதிகமாகவே படத்தில் வெட்டுக்களை போட்டது. மொத்தம் 25 இடங்களில் அவர் திருத்தம் சொன்னார்கள். எப்படியாவது பத்தாம் தேதிக்கு ரிலீஸ் செய்துவிட வேண்டும் என உறுதியாக முடிவு எடுத்ததால்; அவர்கள் சொன்ன இடங்களை திருத்தி படத்தை வெளியிட்டார்கள். வெளிநாடுகளில் எந்த கட்டும் இல்லாமல் ரிலீஸாகியுள்ளது.

சூப்பராக இருக்கும் படம்: தமிழ்நாட்டில் காலை ஒன்பது காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது பாராட்டை படத்துக்கு தெரிவிக்கிறார்கள். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா என அனைவருமே ஸ்கோர் செய்துவிட்டார்கள். திராவிட இயக்கத்தின் போராட்டத்தை எந்த காம்ப்ரமைஸும் இல்லாமல் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். சென்சார் கட் மட்டும் விழாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என கொண்டாடுகிறார்கள்.
சூப்பர் ஹிட்தான்: முதல் காட்சி முடிவில் ரசிகர்களின் கருத்தை வைத்து பார்க்கையில் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருப்பது தெரிகிறது. எனவே சிவாவின் ஹிட் லிஸ்ட்டில் பராசக்தியை சேர்த்துவிடலாம் என்றே கூறப்படுகிறது. எஸ்கே போன்றே ரவி மோகனுக்கும் இப்படம் சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்திருக்கிறது. அவரது வில்லத்தனமான நடிப்புக்கு ரசிகர்கள் தங்கள் கரகோஷ ஒலிகளை குறைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாலினி படம் பார்த்தார்: ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமனா பிரபலங்களும் பராசக்தி முதல் காட்சியை பார்த்தார்கள். ரவி மோகன் கெனிஷாவுடன் பார்த்தார். சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி உள்ளிட்டோரும் படத்தை பார்த்தார்கள். அந்தவகையில் நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினியும் இன்று முதல் காட்சியை பார்த்து. பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் படத்தை என்ஜாய் செய்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது என பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











