ஏகே61 படம்... போனிகபூர் வெளியிட்ட புகைப்படம்... நெகட்டிவ் ரோலில் அஜித்?

சென்னை : நடிகர் அஜித் -வினோத் -போனிகபூர் கூட்டணியில் வெளியாகவுள்ளது வலிமை படம்.

இந்தப் படத்தையடுத்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணையவுள்ளது.

ஏகே61 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை அடுத்த மாதத்தில் போடப்பட்டு சூட்டிங் துவங்கவுள்ளது.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வையில் இணைந்த வினோத் -போனிகபூர் தற்போது வலிமை படத்திலும் இணைந்துள்ளனர். நேர்கொண்ட பார்வை அமிதாப் பச்சன் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக தமிழில் வெளியானது. இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார்.

வலிமை கூட்டணி

வலிமை கூட்டணி

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்து தற்போது அடுத்த வாரத்தில் படம் ரிலீசாக உள்ளது. ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். இதன் ஆக்ஷன் காட்சிகள், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளன.

வலிமை திருவிழா

வலிமை திருவிழா

இந்தப் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்த வாரத்தை வலிமை திருவிழாவாக மாற்ற காத்திருக்கின்றனர். இதனிடையே அஜித்தில் 61வது படத்தின் அப்டேட்களையும் போனிகபூர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

ஏகே61 படம் துவக்கம்

ஏகே61 படம் துவக்கம்

அடுத்த மாதம் இந்தப் படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்நிலையில் அஜித்தின் லுக் குறித்த புகைப்படத்தை போனிகபூர் இரு தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிழல் படமாக காட்சித்தரும் இந்த படத்தில் அஜித் நீண்ட தாடியுடன் ஸ்டைலான கூலர்சுடன் காணப்படுகிறார்.

ஏகே61 படத்திற்கு தயாராகும் அஜித்

ஏகே61 படத்திற்கு தயாராகும் அஜித்

இந்தப் படத்திற்காக அஜித் தயாராகி வருவதாகவும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அஜித் 61 படத்தில் அஜித், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் முன்னதாக வில்லனாக நடித்துள்ள குஷி, வரலாறு மற்றும் மங்காத்தா படங்களில் பட்டையை கிளப்பியிருப்பார்.

Recommended Video

Ajith Sir இதை சொல்லும்போது வெக்கமா வரும் !Valimai Villain First Exclusive Tamil Interview
எதிர்பார்ப்பில் ஏகே61

எதிர்பார்ப்பில் ஏகே61

அந்த வகையில் இந்தப் படமும் அவருடைய கேரியர் பெஸ்ட்டாக அமையும் என நம்பலாம். வலிமை படத்தின் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஏகே61 படமும் பூஜை போடப்படுவதற்கு முன்னதாகவே மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. படம் அடுத்த மாதத்தில் பூஜை போடப்பட்டு தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X