நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரில் அஜித் 'அப்படி' சொன்னது சிவகார்த்திகேயனுக்கா?

By Siva

Recommended Video

Nerkonda Paarvai Trailer: நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரில் சிவகார்த்திகேயனை பார்த்து பேசினாரா?.. அஜித்

சென்னை: நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரில் அஜித் சொன்ன வசனம் சிவகார்த்திகேயனுக்காகவா என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

ட்ரெய்லரில், ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க என்று அஜித் கூறியது ரசிகர்களை மிகவும் கவர்ந்துவிட்டது. அதே சமயம் அந்த வசனத்தை அஜித் சிவகார்த்திகேயனுக்காக பேசியது போன்று உள்ளது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தை பார்த்திருப்பீர்கள். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் தல தான் நமக்கு முக்கியம் என்று தன் அம்மா ராதிகாவிடம் தெரிவிப்பார். அவர் தலை முக்கியம் அதனால் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினாலும் அது அஜித்தை ஆதரிப்பதாகவும் அமைந்துவிட்டது.

அஜித்

அஜித்

மிஸ்டர் லோக்கல் படத்தில் ஆங்காங்கே சிவகார்த்திகேயன் தலக்கு ஆதரவாக பேசியிருப்பார். அது தல ரசிகர்களை குஷிபடுத்தியது. ஆனால் அதே சமயம் படத்தின் சில காட்சிகளில் விஜய்யை கிண்டல் செய்திருப்பார் சிவகார்த்திகேயன். அதனாலேயே படத்தை பார்த்த விஜய் ரசிகர்களோ, யாரும் மிஸ்டர் லோக்கல் படத்தை ஆதரிக்க வேண்டாம், அந்த சிவா நம் தளபதியை கலாய்த்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

சிவகார்த்திகேயனுக்கு அஜித்தை பிடித்திருக்கிறது என்பதற்காக எங்கள் விஜய் அண்ணாவை ஏன் கலாய்த்து வம்புக்கு இழுக்கிறார் என்றார்கள் தளபதி ரசிகர்கள். மேலும் மிஸ்டர் லோக்கல் படத்தில் தனுஷையும் சிவா சீண்டியிருந்தார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரில் அஜித், ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க என்று கேட்டது சிவகார்த்திகேயனுக்கு நான் நன்கு பொருந்தியுள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் கஷ்டப்பட்டு முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளார். இப்படி தன் திறமையால் முன்னேறிய சிவகார்த்திகேயன் சக நடிகர்களை கிண்டல் செய்வது சரி அல்ல. அவர் எப்பொழுதும் அவர் வழியில் ஜாலியாக சென்று கொண்டிருந்தால் இதை விட பெரிய உச்சத்தை தொடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையிலேயே அஜித் மீது மரியாதை வைத்திருந்தால் பிற நடிகர்களை சீண்டுவதை நிறுத்துவது தான் சிவகார்த்திகேயனுக்கு அழகு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X