Ajith's World Tour - ஆவண படமாகிறதா அஜித்தின் உலக சுற்றுப் பயணம்?.. ரசிகர்களுக்கு செம ட்ரீட்

சென்னை: Ajith's World Tour (அஜித்தின் உலக சுற்றுப்பயணம்) அஜித் செய்யும் வேர்ல்ட் டூரை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வீடியோவாக பதிவு செய்யவிருக்கிறார் என தகவல் வெளியானதை அடுத்து அது ஆவண படமாக மாறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அஜித்குமார் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்தது. போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தைவிட துணிவு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அஜித் உற்சாகத்தின் உச்சத்தில் இருப்பதாகவும், அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Kamal Haasan’s Vikram movie trailer out now
n

ஏகே 62: துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித்குமார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதையில் இரண்டாம் பாதி லைகா நிறுவனத்துக்கு பிடிக்காததால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் வெளியேறியதுதான் சில மாதங்கள் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.

மகிழ் திருமேனி இன்: விக்னேஷ் சிவன் வெளியேறியதை அடுத்து அஜித் 62ஆவது படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட்டாகியிருக்கிறார். கதையை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியிருந்த அவர் தற்போது கதையை இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கருதப்படுகிறது.

அஜித்தின் வேர்ல்ட் டூர்: இதற்கிடையே பரஸ்பர மரியாதை பயணம் என்ற பெயரில் நடிகர் அஜித்குமார் பைக்கில் வேர்ல்ட் டூர் செல்கிறார். ஏகே 62 படத்தை முடித்துவிட்டு செல்லலாம் என முடிவெடுத்திருந்த அவர் படம் தொடங்க தாமதம் ஆனதால் முதல்கட்ட பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் இப்போது திபெத், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அதுதொடர்பான வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Ajiths World Tour becoming a documentary Movie?

அஜித்துடன் நீரவ் ஷாவும் பயணம்: இந்நிலையில் அஜித் செய்யும் உலக சுற்றுப்பயணத்தை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வீடியோவாக பதிவு செய்யவிருக்கிறார் என்ற புதிய தகவல் ஒன்று வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த பயணத்தை பதிவு செய்வதற்காக நீரவ் ஷாவும் அஜித்துடன் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதுவரை சென்ற பயணம் வீடியோவாக எடுக்கப்பட்டு அதை தனது குடும்பத்தினருக்கு அஜித் போட்டுக்காட்டியதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஆவண படமாகிறதா?: அதேசமயம் இந்த வீடியோக்கள் அனைத்தும் பொது வெளியில் வெளியிடப்படுமா என்ற கேள்வியும் அஜித் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. ஆனால், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளாத அஜித், இந்த சுற்றுப்பயணத்தை ஆவணப் படமாக மாற்ற ஒத்துக்கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவுதான். இருப்பினும் அப்படி ஒன்று நடந்தால் தங்களுக்கு செம ட்ரீட்டாக அது இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X