அஜித்திற்கு தந்தை கொடுத்த சுதந்திரம் இவ்வளவா?.. பக்கா ஜென்டில்மேனா இருந்திருக்காரே

சென்னை: நடிகர் அஜித்திற்கும் அவரது சகோதரர்களுக்கும் தந்தை சுப்ரமணியம் கொடுத்திருந்த சுதந்திரம் ரசிகர்களை ஆச்சரியப்பட செய்திருக்கிறது.

ரசிகர்களால் தல, ஏகே என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் அஜித் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை மரணமடைந்த அஜித்தின் தந்தை

காலை மரணமடைந்த அஜித்தின் தந்தை

அஜித்தின் தந்தை பெயர் சுப்ரமணியம், தாயின் பெயர் மோகினி. தமிழரான சுப்ரமணியம் கடந்த சில வருடஙக்ளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அஜித்தின் பெசன்ட் நகர் வீட்டில் இருந்த அவர் இன்று காலை உயீரிழந்தார். அவரக்கு வயது 84. சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. அவரது இறப்பையொட்டி அஜித்திற்கும், அவரது சகோதரர்களுக்கும் பலரும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க தங்களது தந்தை குறித்து அஜித் சகோதரர் அனில்குமார் பேசியிருக்கும் விஷயம் குறித்து பார்க்கலாம்.

அஜித் தந்தை செய்த சம்பவம்

அஜித் தந்தை செய்த சம்பவம்

சில மாதங்களுக்கு முன்பு அனில்குமார் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "எனது தந்தை ஆர்த்தடாக்ஸ் குடும்பத்திலிருந்து வந்தவர். அதன்படி பார்த்தால் அங்கிருந்து வந்தவர் சிகரெட் பழக்கம், மது பழக்கம், அசைவ உணவு உண்பது கெட்ட பழக்கம் என கருதுவார்கள். ஆனால் எங்கள் தந்தை அப்படி இல்லை. இதெல்லாம் கெட்டப்பழக்கம் என்று சொல்வதற்கு இவர்கள் யார் என்ற மனப்பான்மையில் இருந்தவர். அதனால் அவர் மதுப்பழக்கத்தையும், சிகரெட் பழக்கத்தையும் கொண்டிருந்தவர். அதேபோல் அசைவம் உண்ணும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். ஆனால் எனது அம்மா சைவம். ஆர்த்தடாக்ஸ் பின்னணியிலிருந்து வந்த ஒருவர் அசைவ உணவு பழக்கத்தோடும், அந்த பின்னணியிலிருந்து வராத எனது தாய் சைவமாகவும் இருந்தார்கள். இருப்பினும் அசைவ உணவை அவர் சமைத்துக் கொடுப்பார்.

எங்களுக்கு கொடுத்த சுதந்திரம்

எங்களுக்கு கொடுத்த சுதந்திரம்

அதேசமயம், எங்களிடம் நீங்கள் அசைவ உணவு உண்ண வேண்டுமென்றால் உண்ணுங்கள். வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். அது உங்கள் விருப்பம்தான் என்றே தந்தையும், தாயும் சொன்னார்கள். எங்கள் மூன்று பேரில் அஜித்தும், அனூப்பும் அசைவ உணவு உண்ணும் பழக்கம் உடையவர்கள். நான் சைவ உணவுதான் சாப்பிடுவேன். அதேபோல் சிறு வயதில் எங்கள் தந்தையும், தாயும் எங்களிடம் சிகரெட் அடிக்க வேண்டுமா, மது குடிக்க வேண்டுமா எதுவாக இருந்தாலும் எங்கள் முன்னாடியே செய்யுங்கள் என சுதந்திரம் கொடுத்தார்கள். ஆனால் அந்த சுதந்திரம்தான் எங்களுக்கு பெரிய பொறுப்பாக இருந்தது" என்றார். இந்தப் பேட்டியை பார்த்த அஜித் ரசிகர்கள் அடடா ஏகேவின் தந்தை இவ்வளவு ஜென்டில்மேனாக இருந்திருக்கிறாரே. அதனால்தான் அஜித்தும் ஜென்டில்மேனாக இருக்கிறார் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

அஜித்தும், சகோதரர்களும் வைத்த கோரிக்கை

அஜித்தும், சகோதரர்களும் வைத்த கோரிக்கை

முன்னதாக, தங்களது தந்தையின் இறப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட அஜித் சகோதரர்கள், "கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்துவந்தோம். எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம். மேலும் எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்துவந்தார்.

ப்ளீஸ் ஒத்துழைப்பு கொடுங்கள்

ப்ளீஸ் ஒத்துழைப்பு கொடுங்கள்

கவலையில் உள்ள இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசி வாயிலாகவும், குறுந்தகவல் வாயிலாகவும் விசாரிக்கிறீர்கள். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலவில்லை. அதை இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எனவே ஒத்துழைப்பு கொடுங்கள்" என கோரிக்கை வைத்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X