“ரொம்ப பெருமையா இருக்கு“… வலிமை படத்தைப் பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் !
சென்னை : வலிமை படத்தை இயக்கியதற்காக பெருமைப்படுகிறேன் என இயக்குநர் எச்.வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
வலிமைத் திரைப்படம் பிப்ரவரி 24ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்திலிருந்து ஏகப்பட்ட ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

வலிமை
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஹீரோயினாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவதாக உள்ளது.

பிப்ரவரி 24ந் தேதி
வலிமை திரைப்படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவலால் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டு, தற்போது பிப்ரவரி 24ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் அஜித்தின் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற படங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்
காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அஜித், இப்படத்தில், பல ஆபத்தான ஸ்டண்ட் மற்றும் ரேஸ் காட்சிகளை தானே செய்து ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தை பாக்ஸ் ஆபிஸ் பிளாக் பஸ்டராக மாற்ற அதிரடியாக பல ப்ரோமோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளார்.

பெருமைப்படுகிறேன்
இந்நிலையில், வலிமை திரைப்படத்தை பார்த்த, அஜித் என்னிடம், இந்தப் படத்தை நீங்கள் இயக்கியதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றார். இந்தப் படத்தைத் தயாரித்த பிறகு நான் ஒரு பெருமைக்குரிய மகனைப் போல உணர்கிறேன். என் அம்மா, அப்பா மற்றும் என் குடும்பத்தாருக்கு இந்தப் படத்தைத் திரையிடப் போகிறேன். என தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











