தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..!
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை: எச்.வினோத் சொன்ன கதைக்கு நடிகர் அஜித் ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி இந்தியில் சூப்பர் ஹிட்டான படம் பிங்க். இதனை நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இயக்குனர் எச்.வினோத் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.

போனி கபூர் தயாரிப்பில், அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான் அஜித்தின் அடுத்தப் படத்தையும் தயாரிக்கிறார். அந்த படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார்.
அடுத்தப் படத்துக்காக வினோத் சொன்ன கதை, அஜித்துக்கு திருப்தியாக இல்லை என்றே கூறப்பட்டது. இதனால் அந்த படம் குறித்த செயல்பாடுகள் பேச்சு வார்த்தையில் மட்டுமே இருந்தன.
இந்நிலையில் எச்.வினோத் சொன்ன மற்றொரு கதை அஜித்துக்கு பிடித்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, இயக்குனருடன் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜித்திடம் இருந்து கிரீன் சிக்னல் வந்துவிட்டதால் போனி கபூர் மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் சர்ப்ரைஸ்.


Click it and Unblock the Notifications











