அந்த மனசு தான் சார் கடவுள்.. விமான நிலைய பெண் ஊழியருக்கு சல்யூட் வைத்த அஜித்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: துணிவு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்லும் நடிகர் அஜித் சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு சல்யூட் வைத்த காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடித்து வருகின்றனர்.

அந்த படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற உள்ள நிலையில், படக்குழு இன்று விமானம் மூலம் புறப்பட்டுள்ளனர்.

தூள் கிளப்பிய துணிவு

தூள் கிளப்பிய துணிவு

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையே தெறிக்கவிட்டது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாங்காக் பயணம்

பாங்காக் பயணம்

துணிவு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவுடன் நடிகர் அஜித் பாங்காக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் காட்சிகள், ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, விமான நிலைய ஊழியர்களுக்கு மரியாதை செலுத்துவது என மாஸ் காட்டி உள்ளார்.

மஞ்சு வாரியர் உடன்

மஞ்சு வாரியர் உடன்

பனக்காக்கில் நடக்கும் படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியரும் கலந்து கொள்கிறார். அஜித் மற்றும் மஞ்சு வாரியர் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகின்றன. செம க்யூட்டாக அனைவரிடத்திலும் சிரித்து பேசிவிட்டு நடிகை மஞ்சு வாரியர் செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

சல்யூட் அடித்த அஜித்

சல்யூட் அடித்த அஜித்

இந்நிலையில், மஞ்சு வாரியர் முன்னாடி சென்றதும் அடுத்ததாக செக்கிங்கிற்குள் நுழையும் நடிகர் அஜித், அங்கிருந்த பெண் ஊழியரை பார்த்து சல்யூட் அடிக்கும் காட்சிகள் அஜித் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன. என்ன மனுஷன்யா இவரு என அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் கிளாஷ் கன்ஃபார்ம்

பொங்கல் கிளாஷ் கன்ஃபார்ம்

வாரிசு படம் பொங்கலுக்கு கன்ஃபார்மாக வரப் போவதாக தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் ட்வீட் போட்டுள்ளார். ஆனால், இது தொடர்பாக போனி கபூர் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிந்து விட்டால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொங்கலுக்கு துணிவு vs வாரிசு கிளாஷ் இருக்குமா என இரு தரப்பு ரசிகர்களும் வெறித்தனமாக வெய்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X