Ajith Sanjay Dutt: லியோ வில்லனுடன் செல்ஃபி எடுத்த அஜித்... விடாமுயற்சியில் இணைகிறாரா சஞ்சய் தத்..?
துபாய்: கோலிவுட் மாஸ் ஹீரோ அஜித், தற்போது விடாமுயற்சி படப்பிடிப்புக்காக ரெடியாகிவிட்டார். விடாமுயற்சி படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ள அஜித், இன்னொரு பக்கம் பைக் ட்ரிப் செல்வதிலும் பிஸியாக காணப்படுகிறார்.
இதனிடையே இருதினங்களுக்கு முன்னர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை சந்தித்திருந்தார் அஜித். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகரும், விஜய்யின் லியோ பட வில்லனுமான சஞ்சய் தத்தை அஜித் சதித்துள்ளது ட்ரெண்டாகி வருகிறது.

அஜித் - சஞ்சய் தத் திடீர் சந்திப்பு: அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம், அஜித்துக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. இதனால், அஜித்தின் அடுத்தப் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதன்படி அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி உருவாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.
இதனால், அஜித் வெளிநாடுகளில் பைக் ட்ரிப் சென்று வருகிறார். நேபாளம், பூடான் என பல நாடுகளுக்கும் பைக் டூர் சென்ற அஜித், சில வாரங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். ஆனாலும், அதே வேகத்தில் தற்போது துபாய் பறந்துவிட்ட அவர், அங்கும் பைக்கில் ரவுண்ட் அடித்து வரும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதேபோல் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ட்ரெண்டாகி வருகின்றன.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் அஜித்தும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் சந்தித்துக்கொண்ட போட்டோ, இணையத்தில் தீயாக பரவியது. அஜித்தும் மோகன் லாலும் துபாயில் சந்தித்துக்கொண்டதால், இந்தக் கூட்டணியை விடாமுயற்சி படத்தில் பார்க்க முடியுமா என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் டாப் ஹீரோவான சஞ்சய் தத்தும் அஜித்தை சந்தித்துள்ளார்.
முக்கியமாக அஜித் - சஞ்சய் தத் சந்திப்பும் துபாயில் தான் அரங்கேறியுள்ளது. சஞ்சய் தத்துடன் அவரது மனைவியும் அஜித்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்தப் போட்டோவும் இணையத்தை கலங்கடித்து வருகிறது. விஜய்யின் லியோ படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சஞ்சய் தத். அவரது ஆண்டனி தாஸ் கேரக்டருக்கான க்ளிம்ப்ஸ் வீடியோ, சஞ்சய் தத் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது அஜித் - சஞ்சய் தத் சந்தித்துக் கொண்டது, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், அஜித்தின் விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத்தும் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அஜித்தும் சஞ்சய் தத்தும் மீட் செய்துள்ளது இன்னும் எதிர்பார்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











