ஒரு வழியாக சுந்தர் சி கதையை ஓகே செய்த அஜீத்!
கவுதம் மேனன் படம் முடிந்ததும், அஜீத்தை அடுத்து இயக்கப் போகிறவர் சுந்தர் சி.
ரஜினி, கமல், அஜீத், கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களையெல்லாம் இயக்கியவர் சுந்தர் சி. காமெடி ஸ்பெஷலிஸ்ட் என்றாலும், அவ்வப்போது அதிரடி ஆக்ஷனும் தருவதில் கில்லாடி.
இப்போது அரண்மனை படத்தை இயக்கி வரும் சுந்தர், அடுத்து அஜீத்தை இயக்கப் போகிறார்.

சத்யா..
கவுதம் மேனன் இயக்கத்தில் இப்போது அஜீத் நடித்து வரும் படத்துக்கு சத்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இது வரும் தீபாவளிக்கு வரும் படம்.

கவுதமுக்கு முன்பே
இந்தப் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்தின் இயக்குநர் சுந்தர் சிதான். இருவரும் ஏற்கெனவே இணைவதாகக் கூறப்பட்டது. ஆனால் ஸ்க்ரிப்டை முழுமையாக தயார் செய்தபிறகு தான் முடிவு செய்வதாக அஜீத் கூறியதாக தகவல் வெளியானது.

குஷ்பு
சுந்தர்.சி. மனைவியும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அஜீத்-சுந்தர்.சி விரைவில் இணையவிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.

உன்னைத் தேடி
சுந்தர்.சியும் அஜீத்தும் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியவர்கள்தான். அஜீத்தின் ஆரம்ப நாட்களில் அவரை வைத்து உன்னைத் தேடி என்ற படத்தை சுந்தர் இயக்கியிருந்தார். அது அஜீத்தின் கேரியருக்கு அப்போது பெரிதும் கைகொடுத்தது.


Click it and Unblock the Notifications











