Ajith - என் படத்துக்கு பேக் அப் சொல்ல நீ யாரு - ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நடிகையை விரட்டிவிட்ட அஜித்
சென்னை: Ajith (அஜித்) அட்டகாசம் படத்தின்போது ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அஜித் ஒரு நடிகையை துரத்திவிட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வரும் அஜித் குமார் ஆரம்பகாலத்தில் பெரும் போராட்டங்களை சந்தித்தவர். யாரின் துணையும் இல்லாமல் திறமையின் துணையோடு விழுந்து எழுந்து சினிமாவில் நடை பழகியவர். இதனாலேயே அவருக்கென்று பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்போது அவர் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அப்படி அவர் சமீபத்தில் நடித்த துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
சரணே துணை: அஜித் பல இயக்குநர்களுக்கு முதல் பட வாய்ப்பை வழங்கியவர். எஸ்.ஜே.சூர்யா, சரண், ஏ.ஆர்.முருகதாஸ், ராஜுசுந்தரம் என அந்தப் பட்டியல் நீளும். இவர்களில் எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ராஜுசுந்தரம் ஆகியோருடம் ஒரு படத்தில் மட்டுமே பணியாற்றினார். ஆனால் சரணுடன் மொத்தம் நான்கு படங்கள் பணியாற்றினார். அதில் அசல் படத்தை தவிர மற்ற படங்கள் சூப்பர் ஹிட்டானவை.

காதல் மன்னன்: கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த சரண் காதல் மன்னன் படத்தை முதல் படமாக இயக்கினார். அந்தப் படத்தில் அஜித் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என விவேக் கூற காதல் மன்னன் படத்தில் அஜித் உள்ளே வந்தார். அந்தப் படம் கடந்த 1998ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்துதான் அஜித்துக்கு பெண் ரசிகைகள் அதிகளவு உருவாக ஆரம்பித்தனர்.
தொடர்ந்த கூட்டணி: காதல் மன்னன் பெரும் வெற்றிக்கு பிறகு அஜித்தை வேறு ஜானரில் காண்பிக்க திட்டமிட்ட சரண் அமர்க்களம் படத்தை எடுத்தார். அதுவரை ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜ் கிடைக்காமல் இருந்த அஜித்துக்கு அமர்க்களம் படம் அந்த இமேஜை பெற்றுக்கொடுத்தது. ஷாலினி ஹீரோயினாக நடித்திருந்த அந்தப் படம்தான் அஜித்துக்கும், ஷாலினுக்குமான காதல் விதையை தூவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் ரூட்டில் அஜித் - சரண்: அமர்க்களம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் - சரண் கூட்டணி அட்டகாசம் படத்தின் மூலம் இணைந்தது. தென் தமிழ்நாட்டில் அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம் என்ற பேச்சு பொதுவாக கோலிவுட்டில் உண்டு. அப்படிப்பட்ட ரசிகர்களை உருவாக்கிக்கொடுத்தது அட்டகாசம் திரைப்படம்தான். தூத்துக்குடியை பேக் ட்ராப்பாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படமும் ஹிட்டானது.
தல தீபாவளி: படம் கமர்ஷியலாக உருவாகி அதில் இருக்கும் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. குறிப்பாக தெற்கு சீமையில என்னை பத்தி கேளு பாடலை வைரமுத்து அதகளமாய் எழுதியிருப்பார். அந்தப் பாடலில் தீபாவளி தல தீபாவளி என அஜித்தின் பட்டமான தல என்ற வார்த்தையை வரும்படி எழுதி ஒரு மேஜிக் நிகழ்த்தியிருப்பார். இன்றுவரை அந்தப் பாடல் அஜித் ரசிகர்களின் ஃபேவரைட்.

தல தீபாவளி ஷூட்டிங்: இந்தப் பாட்டின் ஷூட்டிங்கின்போது பாடலில் நடனமாடிய நடிகை ரகசியாவை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அஜித் துரத்திய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது பாடலின் ஷூட்டிங்போது இரண்டு சரணம், ஒரு பல்லவிக்கான நடன காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதனையடுத்து விடப்பட்ட பிரேக்கில் ரகசியா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். ஆனால் அதை அஜித் பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.
நடிகையை துரத்திவிட்ட அஜித்: சூழல் இப்படி போய்க்கொண்டிருக்க அடுத்தக்கட்ட ஷூட்டிங் தொடங்க தாமதமாக ரகசியா, "என்னங்க பேக் அப் பண்ணிடலாமா" என கேட்டிருக்கிறார். இதை கேட்டு உச்சக்கட்ட கோபமடைந்த அஜித், நேராக அவரிடம் சென்று என் படத்துக்கு பேக் அப் சொல்ல நீ யாரு என கேட்டிருக்கிறார்.
அதனையடுத்து இயக்குநர் சரணை அழைத்து இனி இந்தப் பொண்ணு இங்க இருக்கக்கூடாது அனுப்பிவிட்ருங்க என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அதனால்தான் பாடலின் பாதியில் ரகசியா இடம்பெற்றிருக்கமாட்டார். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருந்தார். ரகசியா வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சீனா தானா பாடலுக்கு நடனமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











