Ajith AK 63: ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் ஷாலினி.. அஜித் கொடுத்த சிக்னல்.. AK 63 கன்ஃபார்ம்!

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுடன் நடந்த திருமண நிகழ்ச்சியில் அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகளுடன் கலந்துகொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் ஷாலினி
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். குறிப்பாக சமீபத்தில் வெளியான ஆதிக் ரவிச்சந்திரனின் மார்க் ஆண்டனி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்திருந்தது.

 Ajith: Shalini Ajith greetings Director Adhik Ravichandran and Prabhu daughter Aishwarya wedding

இதனையடுத்து அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், இந்த வாய்ப்புக்காக பல வருடங்கள் காத்திருந்தார். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஆதிக் ரவிச்சந்திரனும் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதில் லெஜண்ட் சரவணன், விஷால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த வரிசையில் அஜித்தின் மனைவி ஷாலினி, அவர்களது மகள் ஆகியோரும் பங்கேற்று ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் திருமண நிகழ்ச்சியில் ஷாலினி, அவரது மகள் கலந்துகொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. முக்கியமாக இதன்மூலம் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. முன்னதாக ஏகே 63 படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கலாம் என செய்திகள் வெளியாகின. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் தான் ஏகே 63 படத்தை இயக்குவார் என அஜித் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகின.

இதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக ஆதிக் ரவிச்சந்திரன் திருமண நிகழ்ச்சியில் ஷாலினி அஜித் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்ததும் ஏகே 63 அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் காமெடி ஜானரில் இருக்கும் எனவும், இதுவரை ஆக்‌ஷனில் பார்த்த அஜித்துக்கு இது இன்னொரு தரமான சம்பவமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X