Ajith Shalini: Wow! என்றும் இளமை மாறாத ஷாலினி... அஜித்துடன் இவ்ளோ க்யூட்டா பார்த்திருக்கீங்களா..?
துபாய்: அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்டது. இதனயடுத்து துபாயில் ஓய்வெடுத்து வருகிறார் அஜித். அவருடன் ஷாலினியும் துபாயில் இருக்கும் நிலையில், இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோ வைரலாகி வருகிறது.
அஜித்துடன் க்யூட்டாக வலம் வரும் ஷாலினி
அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித், ஷாலினி இருவரும் காதலிக்கத் தொடங்கினர். உடனடியாக இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அன்று முதல் இன்று வரை கோலிவுட்டில் க்யூட்டான தம்பதியினராக வலம் வருகின்றனர் அஜித்தும் ஷாலினியும். இருவருக்கும் அனோஸ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

திருமணத்துக்குப் பின்னர் நடிப்பில் இருந்து விலகிவிட்டார் ஷாலினி. அதேநேரம் அஜித் தொடர்ந்து மாஸ் ஹீரோவாக மிரட்டி வருகிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், தற்போது துபாயில் ஓய்வெடுத்து வருகிறார். அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங், இரண்டு ஷெட்யூல்கள் வரை முடிந்துவிட்டது. இதனையடுத்து த்ரிஷா மலையாள படத்தில் நடிப்பதற்காக சென்னை திரும்பிவிட்டார்.
அதேபோல், ஆக்ஷன் கிங் அர்ஜுனும் சென்னைக்கு ரிட்டர்ன் வந்துவிட்டார். ஆனால் அஜித் மட்டும் தனது குடும்பத்தினருடன் துபாய் சென்றுவிட்டாராம். அங்கு அவர் ஜென்ரலாக ஒரு மெடிக்கல் செக்கப் செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே துபாயில் ஷாப்பிங் சென்ற அஜித்தும் ஷாலினியும் க்யூட்டாக போட்டோ எடுத்துள்ளனர். ரசிகர் ஒருவருடன் அஜித், ஷாலினி எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
அதில், அஜித் வழக்கம் போல ஒயிட் ஷார்ட் அணிந்தபடி, சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் மாஸ் காட்ட, ஷாலினி ரொம்பவே இளமையாக தோற்றமளிக்கிறார். இருவரும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் ஷாலினியை இவ்ளோ இளமையாகவும் ஸ்டைலிஷாகவும் பார்த்தது கிடையாது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.
லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அஜித்துடன் த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். ரோட் ஆக்ஷன் மூவியாக உருவாகும் விடாமுயற்சி திரைப்படம் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் வாங்கியுள்ளதாம். அதேபோல் ஆடியோ ரைட்ஸ்ஸை சோனி நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











