ஸ்ரீதேவிக்கு சிறப்பு பூஜை: மனைவியுடன் கலந்து கொண்ட அஜித்
Recommended Video

சென்னை: ஸ்ரீதேவியின் நினைவு நாளை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் அஜித் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
நடிகை ஸ்ரீதேவி இறந்து ஓராண்டாகப் போகிறது. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி துபாயில் உயிர் இழந்தார். நாத்தனார் மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.

அவர் இறந்து ஓராண்டாகப் போகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் நினைவு நாளுக்கு 10 நாட்கள் இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள அவரின் பங்களாவில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார் அவரின் கணவர் போனி கபூர்.
அந்த சிறப்பு பூஜையில் போனி கபூரின் தம்பியும், நடிகருமான அனில் கபூர் கலந்து கொண்டார். மேலும் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். அஜித்தும், ஷாலினியும் பூஜையில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பியபோது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ வெளியாகியுள்ளன.
அஜித் நடிக்கும் தல 59, தல 60 ஆகிய படங்களை போனி கபூர் தான் தயாரிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவி மீது அஜித் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











