சச்சினோடு சேர்த்து அஜித், ஷாலினியையும் வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: அஜித், ஷாலினியின் 19வது திருமண நாளுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.
அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள்
தல ரசிகர்கள் அஜித் மற்றும் ஷாலினிக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் ட்வீட் போட்டுள்ளனர். #HappyWeddingDayAJITHSHALINI என்ற ஹேஷ்டேகுடன் அவர்கள் ட்வீட் செய்கிறார்கள்.
அஜித்
சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாளான இன்று தலக்கு திருமண நாள். இருவருக்கும் சேர்த்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஷாலினி
அஜித், ஷாலினி திருமண புகைப்படங்களை வெளியிட்டு பலரும் வாழ்த்தியுள்ளனர்.
திருமண நாள்
பிற நடிகர்களின் ரசிகர்களும் அஜித், ஷாலினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











