'கன்னம் சுருங்கிட நீயும்.. மீசை நரைத்திட நானும்' 23வது திருமண நாளை கொண்டாடிய ஷாலினி அஜித்குமார்!
சென்னை : அஜித் ஷாலினி தம்பதியினர் தங்களது 23வது திருமண நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவர்களது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபிஷாலினி, பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார்.

அதன்பின் ஹீரோயினாக விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் அறிமுகமாக ஷாலினிக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது.
நடிகை ஷாலினி : காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றிக்கு பிறகு அமர்க்களம், கண்ணுக்குள் நிலவி, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். இரண்டாவது படத்திலேயே அஜித்துடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அமர்க்களம் படத்தில் ஷாலினி நடிகையாக மட்டுமில்லாமல், சொந்தக்குரலில் பாட என்ற பாடலையும் பாடி இருந்தார்.
காதல் திருமணம் : அஜித் ஷாலினியிடம் காதலை சொல்ல அதை ஷாலினி ஏற்றுக்கொண்டதை அடுத்து 2000ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு எட்டு ஆண்டுகள் கழித்து அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர். தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா அப்பா,அம்மாவை விட வளர்ந்து செம க்யூட்டாக இருக்கிறார்.

ஸ்பெஷல் போட்டோ : நேற்று அஜித் ஷாலினி தம்பதியினர் 23வது திருமண நாளை கொண்டாடினர். பல பிரபலங்களும், அஜித்தின் ரசிகர்களும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து, ஷாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் கன்னத்தோடு கன்னம் வைத்து, இனிப்பு கொடுத்து திருமணநாள் வாழ்த்து கூறிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவைப்பார்த்த ரசிகர்கள் 'கன்னம் சுருங்கிட நீயும்.. மீசை நரைத்திட நானும்' என்று பாட்டுப்பாடி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிறந்த காதல் ஜோடி : திரைத்துறையில் காதலும், காதல் திருமணமும் நடப்பது இயல்பு தான் என்றாலும், அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட பல நட்சத்திர தம்பதிகள் கருத்து வேறுபாடால் பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடியாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினர்.


Click it and Unblock the Notifications











