24 வருஷம்.. இணையத்தில் டிரெண்டாகும் அஜித், ஷாலினியின் திருமண பத்திரிக்கை!

சென்னை: தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த ஜோடியாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அஜித்தின் ரசிகர்கள் அதை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படத்தில் நடித்து வந்த ஷாலினி, விஜய்யுடன் காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படம் விஜய்க்கு மட்டுமில்லாமல் ஷாலினிக்கு சினிமாவில் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தைத் தொடர்ந்து அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த ஷாலினி சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார்.

Ajith Kumar Shalini invitation

அஜித்,ஷாலினி: அந்த படத்தில் ஒரு காட்சியில் அஜித், தன் கையில் கத்தியை வைத்து அறுக்க முயற்சிக்கையில், அது உண்மையிலேயே அறுத்துவிட்டதாம். இதனால், பதறிப்போன, ஷாலினி, அவரை நன்கு பார்த்துக்கொண்டாராம். இதில் இம்ப்ரஸ் ஆன அஜித், தன் காதலை சொல்ல, படப்பிடிப்புத்தளத்திலேயே ஓகே சொல்லியிருக்கிறார், ஷாலினி. அதுமட்டுமில்லாமல்,அஜித்தின் பிறந்த நாள் பரிசாக எண்ணற்ற பரிசுப்பொருட்களை, இயக்குநர் சரண் மூலம் அஜித்திடம் கொடுத்து இருக்கிறார் ஷாலினி.

காதல் திருமணம்: இதைத்தொடர்ந்து,அஜித் தனது காதலை, தன் பெற்றோரிடம் சொல்லி சம்மதம் பெற்றுள்ளார். அப்போது அஜித் பெரிய நடிகராக இல்லையென்றாலும், மகள் மீதும் வருங்கால மருமகன் அஜித் மீதும் வைத்த நம்பிக்கை காரணமாக, ஷாலினியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார், ஷாலினியின் தந்தை. இதைத்தொடர்ந்து 2000ம் ஆண்டு நட்சத்திரங்கள் முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாத ஷாலினி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

திருமண பத்திரிக்கை: அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருக்கும் அஜித் - ஷாலினியின் திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து 24 வருடம் பயணித்து உள்ளனர். இந்ததிருமண பத்திரிக்கையை அஜித்தின் ரதிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விடாமுயற்சி: நடிகர் அஜித் தற்போது, மகிழ் திருமேனியின் 'விடாமுயற்சி, மறுபுறம் ஆதிக் ரவிச்சந்திரனின் 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இரண்டு படங்களின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 31-ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X