Ajith - மக்கள் ஸ்மார்ட்டானவர்கள்.. புரிந்துகொள்ளுங்கள் அஜித் - பஞ்சாயத்தை முடிக்காத ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Ajith (அஜித்) மக்கள் எப்போதும் ஸ்மார்ட்டானவர்கள் அதை அஜித் புரிந்துகொள்ள வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக அஜித் விளங்கி வருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக விஜய் நடித்த வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்ததால் அஜித் ரொம்பவே உற்சாகமாக காணப்பட்டார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்தது.

Ajith should understand that people are always smart says Blue Sattai Maran

விடாமுயற்சி: அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்திருக்கிறார். தடையறத்தாக்க,மீகாமன், தடம் என ஆக்‌ஷன் கதைகளை இயக்குவதில் மகிழ் முத்திரை பாதித்திருப்பதால் நிச்சயம் அஜித்துடன் இணையும் படம் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

எப்போது ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி அதற்கு படத்தின் நிலைமை என்ன ஆனதென்றே தெரியவில்லை. லைகாவில் நடந்த அமலாக்கத்துறை சோதனையால் படம் தாமதம் என கூறப்படுகிறது. இதற்கிடையே அஜித்தோ மகிழ் திருமேனியுடன் லொகேஷன் பார்க்க வெளிநாடு பறந்துவிட்டார் என்ற தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

த்ரிஷாவின் நிலை?: அதேபோல் படத்தின் ஹீரோயினாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் முதலில் த்ரிஷா ஒத்துக்கொண்டார் ஆனால் படம் தொடங்க தாமதம் ஆகிக்கொண்டே இருப்பதாலும்; கைக்கு அட்வான்ஸ் வந்து சேராததாலும் விடாமுயற்சியை அவர் விட்டுவிட்டார் என்ற மற்றொரு தகவல் சமீபத்தில் வெளியானது. இப்படி விடாமுயற்சி படம் குறித்து ஏகப்பட்ட நெகட்டிவ் தகவல்கள் வருவதால் ஏகே ரசிகர்களை தலையை பிய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சோதனை மேல் சோதனை: நிலைமை இப்படி இருக்க பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு, 'விளம்பரமே பிடிக்காது என பேட்டி, இசை வெளியீடு, விருது விழா..எதிலும் பங்கேற்காமல் இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வந்துகொண்டே இருப்பது திட்டமிட்ட விளம்பரம், எதேச்சையாக நடப்பது என கேள்வி கேட்டு கருத்துக்கணிப்பு வைத்திருந்தார்.

Ajith should understand that people are always smart says Blue Sattai Maran

விளம்பரம்: இதனையடுத்து அவர் வைத்த ட்விட்டர் கருத்துக்கணிப்பில் 63.3% நெட்டிசன்கள்; அஜித் செய்வது திட்டமிட்ட விளம்பரம் என வாக்களித்திருந்தனர். இதனையடுத்து அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், 'மக்கள் ஸ்மார்ட்டானவர்கள். அஜித் அதை புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.

முடியாத பஞ்சயாத்து: ஏற்கனவே விடாமுயற்சி அப்செட்டில் இருக்கும் அஜித் ரசிகர்களை ப்ளூ சட்டையின் இந்த ட்வீட் மேலும் கோபப்படுத்தியுள்ளது. இந்த ட்வீட்டை பார்த்த ஏகே ரசிகர்கள், இந்த 63.3 சதவீதம் பேரும் விஜய்யின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். ப்ளூ சட்டை மாறனுக்கு எப்போதுமே அஜித்தை பிடிக்காது எனவே அவர் சொல்வதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என பதிலளித்து வருகின்றானர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X