அஜித், சிம்பு மற்றும் விஜய் சேதுபதி தான் செட் ஆவாங்க – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
சென்னை: கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற மஃப்டி திரைப்படத்தின் ரீமேக்தான் "பத்து தல". சிம்பு, கௌதம் கார்த்திக், கலையரசன் மற்றும் பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Recommended Video
கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம்தான் மஃப்டி. சில்லுனு ஒரு காதல் திரைப்பட இயக்குனர் கிருஷ்ணாதான் தமிழில் இதனை ரீமேக் செய்கிறார்.
நீண்ட காலமாக படமாக்கப்பட்டு வரும் இந்தப் படம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 2022 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும் அதே கூட்டணி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்த முதல் திரைப்படம் சில்லுன்னு ஒரு காதல். அதனை இயக்கிய கிருஷ்ணா மற்றும் இசையமைத்த AR ரஹ்மான் ஆகிய மூவரும் மீண்டும் இணையும் படம்தான் "பத்து தல". கிருஷ்ணாவின் திறமையை இந்தப் படத்தில் முழுமையாகக் காணப் போகிறீர்கள் என்று ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிம்புவுக்காக வெயிட்டிங்
சிம்பு தனது தந்தை T ராஜேந்தரின் சிகிச்சைக்காக தற்சமயம் அவருடன் வெளிநாட்டில் தங்கி இருப்பதால், இறுதிக் கட்ட படப்பில் இருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் சிம்புவிற்காக காத்திருக்கின்றனர். மாநாடு படத்தில் உடல் எடையை குறைத்து நடித்திருந்த சிம்பு இந்தப் படத்திற்காக மீண்டும் எடை கூடியுள்ளாராம். கேங்ஸ்டர் கதாப்பாத்திரம் என்பதால் அது தேவைப்பட்டுள்ளதாம்.

அஜித்-விஜய் சேதுபதி
முதலில் சிவ ராஜ்குமார் கதாப்பாத்திரத்திற்காக ஞானவேல் ராஜா மூன்று கதாநாயகர்களை அனுகலாம் என்று திட்டமிட்டிருந்தாராம். நடிகர் அஜித் அல்லது விஜய் சேதுபதி அல்லது சிம்பு என்று மனதில் வைத்து முதலில் சிம்புவை அனுகியுள்ளார். அவரும் உடனே நடிக்க சம்மதித்துவிட்டாராம். இந்த மூவர்தான் அந்த கேங்ஸ்டர் ரோலிற்கு பொருத்தமானவர்கள் என்று ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

தீனா-ரெட்-பத்து தல
நடிகர் அஜித்தின் கேரியரில் தீனா மற்றும் ரெட் திரைப்படங்கள் தான் அவரது மாஸ் இமேஜை கூட்டியது. அதே போல சிம்புவிற்கு இந்தப் படம் மாஸ் இமேஜை அதிகரிக்கும் என ஞானவேல் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஞானவேல் ராஜாவிற்கும் சிம்புவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிம்புவை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். பின்னர் இருவரும் சமாதானமாகி இந்தப் படத்தில் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications