என்னோட வாத்தியார் அஜித் சார் தான்...உருகும் வேம்புலி

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் கமல் கூட சார்பட்டா பரம்பரை டீமை நேரில் அழதை்து பாராட்டி இருந்தார்.

இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தாலும், படத்தில் நடித்த ஒவ்வொருவரும் பிரபலமாகி விட்டார்கள். இதில் நடித்தவர்களின் நிஜப் பெயர்களை மறந்து அவரவர்கள் நடித்த கேரக்டர்களை சொல்லியே மக்கள் கூப்பிடும் அளவிற்கு மக்கள் மனதில் பதிந்து விட்டனர். அதிலும் மாரியம்மாள், வேம்புலி, டான்சிங் ரோஸ், கபிலன், வாத்தியார் என பெயர்களே அனைவரின் மனதிலும் நிற்கும் அளவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அஜித்தின் ரீல் தம்பி

அஜித்தின் ரீல் தம்பி

இந்த படத்தில் வேம்புலி கேரக்டரில் மலையாள நடிகர் ஜான் கொக்கன் நடித்திருந்தார். இவர் அஜித் நடித்த வீரம் படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்திருப்பார். மேலும் பாகுபலி முதல் பாகத்திலும், கேஜிஎஃப் முதல் பாகத்திலும் நடித்து புகழ்பெற்றவர். ஆனால் அந்த படங்களை விட சார்பட்டா பரம்பரை அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தி உள்ளது.

அஜித் தான் என் வாத்தியார்

அஜித் தான் என் வாத்தியார்

இந்நிலையில் சமீப நாட்களாக பசுபதி நடித்த வாத்தியார் கேரக்டர் அதிக அளவில் பேசப்படுகிறது. மீம்ஸ்கள் பலவும் இதை வைத்து உருவாக்கப்பட்டு விட்டன. இதற்கிடையில் வாத்தியார் கேரக்டர் பற்றி ஜான் கொக்கனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என் வாழ்க்கையின் வாத்தியார் அஜித் சார் தான் என குறிப்பிட்டுள்ளார்.

அஜித்திற்கு சமர்ப்பனம்

அஜித்திற்கு சமர்ப்பனம்

இதற்கு முன் சார்பட்டா பரம்பரை ரிலீசான போதும், வேம்புலி கேரக்டரின் வெற்றியை அஜித்திற்கு சமர்ப்பிப்பதாக ஜான் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். மேலும் வீரம் படத்தில் நடிக்கும் போது அஜித் தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாகவும், வாழ்க்கையை கற்றுக் கொடுத்ததாகவும் உணர்ச்சி பூர்வமாக கருத்து பதிவிட்டிருந்தார்.

கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

தற்போது தனது வாழ்க்கையின் வாத்தியார் அஜித் தான் ஜான் குறிப்பிட்டுள்ளதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அஜித் ரசிகர்கள் இதனை அதிக அளவில் ரீட்விட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X