Ajith: கால்ஷீட்டுடன் காத்திருக்கும் அஜித்... மீண்டும் சூர்யா பக்கம் திரும்பிய இயக்குநர்!
சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தனது ஃபேவரைட் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்பட்டது.
அஜித் - சிவா இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது கங்குவா படத்தை இயக்கி வரும் சிவா மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் இணையும் கங்குவா கூட்டணி:சிறுத்தை திரைப்படம் மூலம் தமிழில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தவர் சிவா. முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததால், அடுத்தடுத்து அஜித்துடன் நான்கு படங்களில் இணைந்தார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித் - சிவா காம்போவில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கோலிவுட்டின் மாஸ் கூட்டணியாக வலம் வந்த அஜித் - சிவா இருவரும் விரைவில் இணையவுள்ளதாக சொல்லப்பட்டது. விஸ்வாசம் படத்துக்குப் பின்னர் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தை இயக்கினார் சிவா. இந்தப் படம் நெகட்டிவான விமர்சனங்களால் ரொம்பவே ட்ரோல் செய்யப்பட்டது. இதிலிருந்து வெறித்தனமாக கம்பேக் கொடுப்பதற்காக கங்குவா படத்தை இயக்கி வருகிறார்.
10 மொழிகள், 3டி டெக்னாலஜி என பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய படமாக அமைந்துள்ளது. ஃபேண்டஸியான ஹிஸ்டாரிக்கல் ஜானரில் உருவாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மேக்கிங்கில் மிரட்டும் என சொல்லப்படுகிறது. சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கங்குவா படம் முடிந்ததும் இயக்குநர் சிவா அஜித்துடன் மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அஜித்தின் 63வது படமாக உருவாகவுள்ள இதன் அப்டேட் விரைவில் வெளியாகும் என தல ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது கங்குவா படத்தை முடித்துவிட்டு மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளாராம் சிவா. இவருக்காக அஜித் கால்ஷீட்டுடன் ரெடியாக காத்திருக்க, சிவாவோ சூர்யாவின் புதிய படத்தை இயக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனால், அஜித் - சிவா காம்போ இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அஜித்தின் படத்தை முடித்துவிட்டு தான் மீண்டும் சூர்யாவின் படத்தை சிவா இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.

சூர்யா - சிவா இணையும் திரைப்படம் கங்குவா போல பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம். பான் இந்தியா படமான இதனை இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்காக தமிழில் இருந்தும் தெலுங்கில் இருந்தும் இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் ரெடியாக காத்திருக்கிறதாம். எனவே சூர்யா - சிவா இணையும் படம் குறித்தும் விரைவில் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











