Ajith: “அடுத்து அஜித் படம் பண்றீங்களா..?” கும்பிடு போட்ட சிறுத்தை சிவா... ஆள விடுங்கப்பா மொமண்ட்!
சென்னை: கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இதில் இயக்குநர் சிறுத்தை சிவா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது சிறுத்தை சிவாவிடம் அஜித்துடன் மீண்டும் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்வியை எதிர்பார்க்காத சிறுத்தை சிவா, அங்கிருந்து கும்பிடு போட்டுவிட்டு எஸ்கேப் ஆன வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுத்தை சிவாவின் ஆள விடுங்கப்பா மொமண்ட்
கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சூர்யா, விஷால், ஜெயம் ரவி, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவா ஸ்டேடியம் உள்ளே செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கார்த்தியின் ஜப்பான் வெற்றிப் பெற வேண்டும் என படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கார்த்தியின் சிறுத்தை படம் மூலம் தான் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் சிவா. அதனால் தான் அவர் 'சிறுத்தை' சிவா என ரசிகர்களால் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சிறுத்தையை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் இணைந்தார் சிவா. வீரம், வேதாளம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக மூன்று படங்களில் அஜித் - சிவா காம்போ இணைந்தது. இதில் வீரம், விஸ்வாசம் படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. ஆனால், அதன் பின்னர் ரஜினி நடிப்பில் சிவா இயக்கிய அண்ணாத்த விமர்சன ரீதியாக மிகப் பெரிய தோல்வியை தழுவியது. தற்போது சூர்யா நடிக்கும் கங்குவா படத்தை இயக்கி வருகிறார் சிவா.
இந்நிலையில், அவரிடம் அடுத்து அஜித்துடன் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "அஜித் சாருடன் அடுத்து படம் பண்றீங்களா..?" என கேள்வி வந்ததும், கையெடுத்து கும்பிட்ட அவர் அங்கிருந்து கிளம்பினார். அஜித் படம் என்றதும் சிவா கையெடுத்து கும்பிட்டு கிளம்பிட்டாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். ஆனால், சிவா அப்படி ஆள் கிடையாது, அவர் கேள்வியை சரியாக கவனிக்காமல் சென்றுவிட்டதாக அஜித் ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.
இருந்தாலும் சிறுத்தை சிவாவின் இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக அஜித்தின் 63வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எனவும் சொல்லப்பட்டது. விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், அதன்பின்னர் ஏகே 63 அபிஸியல் அப்டேட்டுக்கு க்ரீன் சிக்னல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











