கலைநயத்துடன் அஜித்தின் மச்சினி வரைந்த ஓவியம்.. ஷாமிலிக்கு இப்படியொரு திறமையா?
சென்னை: அஜித்தின் மச்சினியும் நடிகை ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி ஷீ ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார். சிறந்த ஓவியரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலைநயத்துடன் அட்டகாசமான ஓவியம் ஒன்றை வைத்து அதை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்துள்ளன.
அஞ்சலி, தைப்பூசம், போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஷாமிலியின் அழகான சிரிப்பு, வசீகரமான முகம் மூலம்,நம் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளார். ஷாமிலி சிறுவயதில் நடித்த அனைத்து படங்களும் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்து வந்தது.

அஞ்சலி பாப்பா: ராஜநடை, அஞ்சலி, மலூடி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஷாமிலி, துர்கா, தைப்பூசம், செந்தூர தேவி போன்ற சாமி படங்களில் நடித்து பலருக்கும் இவர் தெய்வக் குழந்தையாகவே தெரிந்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையாக நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
தெய்வக்குழந்தை: இயக்குநர் ராமநாராயணன் இயக்கிய பல சாமி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். குறிப்பாக ராமநாராயணன் இயக்கி துர்கா படம் இவர் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வசூலை வாரி குவித்தது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

கதாநாயகியாக: இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் பரிச்சயமான ஷாமிலி தெலுங்கில் வெளியான ஓய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தமிழில் விக்ரம்பிரபு நடித்த வீரசிவாஜி திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். ஷாமிலி நடிகை மட்டுமில்லாமல் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தி பல ஓவிய படைப்புகளை உருவாக்கி உள்ளார்.
ஆர்ட் கேலரி: இதையடுத்து, தன்னுடைய ஓவியங்களை பார்வையிடும் விதமாகவும், விற்பனை செய்யும் விதமாகவும் 'ஷீ' என்கிற ஆர்ட் கேலரி ஒன்றை தொடங்கினார். தற்போது அந்த கேலரியில் ஆடையே இல்லாமல் ஒரு பெண் அமர்ந்து இருக்கும் ஓவியத்தை வரைந்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குள் மலைப்போல் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











