விஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam

By Siva

அஜித், சிவா இணையும் படங்களில் எந்தெந்த காட்சிகளை பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கிறார்கள்.

ஒரு மொழியில் மட்டும் ரிலீஸான விஸ்வாசம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

விஸ்வாசம் படத்தை அஜித் ரசிகர்கள் தவிர்த்து குடும்பங்கள் கொண்டாட காரணம் உள்ளது. படத்தில் முகம் சுளிக்கும் காதல் காட்சிகள் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. அப்பா மகள் சென்டிமென்ட் கூட அளவோடு தான் உள்ளது. முக்கியமாக அஜித்தால் மட்டுமே அனைவரையும் காப்பாற்ற முடியும், அவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர் என்று படம் முழுக்க கூவ வில்லை.

சிவா

அஜித், சிவா சேர்ந்து பணியாற்றிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு படங்களிலும் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, ஆபாச காட்சிகள் என்று தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தீயது எதுவும் இல்லாதது சிவாவின் வெற்றிக்கு ஒரு காரணம் என்கிறார்கள் ரசிகர்கள்.

பலம்

பலம்

விஸ்வாசம் படத்தில் சில உண்மைகளை கூறியதும் சிவாவின் வெற்றிக்கு ஒரு காரணம். 10 ஆண்டுகள் கழித்தும் அஜித் கருப்பு நிற முடியுடன் இளமையாகவே வரவில்லை. அஜித் வெயிட் போட்டதை விவேக்கை வைத்து கலாய்த்துள்ளார் சிவா. அவருக்கு வயதானதை மறைக்க முயலாதது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

புதுப்படம்

புதுப்படம்

அஜித், சிவா ஆகியோர் விஸ்வாசத்துடன் தங்கள் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. 5வது முறையாகவும் சேர்ந்து படம் பண்ண உள்ளனர். என்ன ஒரு பிரச்சனை, சிவா அப்டேட் எதுவும் கொடுக்க மாட்டார். பரவாயில்லை, பார்த்துக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X