Ajith: “விஜய்க்கு ஈடுகொடுக்கும் அஜித்..” சன் பிக்சர்ஸ், சிவா கூட்டணியில் AK63... மெகா சம்பவம் லோடிங்

சென்னை: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் குறித்து இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை.

 Ajith: Siva will direct Ajiths AK 63 with the Sun Pictures banner

அதேநேரம் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது சிறுத்தை சிவா இயக்கலாம் என சொல்லப்படுகிறது.

விஜய்க்கு ஈடுகொடுப்பதற்காகவே அஜித் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.

அஜித்தின் AK 63 சம்பவம் லோடிங்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித், தற்போது அவரது 62வது படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

முன்னதாக ஏகே 63 படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் எனவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், இந்தப் படத்திற்காக அஜித்துக்கு 150 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டே அடுத்த படம் குறித்து முடிவெடுப்பார் அஜித்.

ஆனால், விடாமுயற்சியை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க அஜித் ரெடியாகிவிட்டார். அதாவது சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் இருவரது இயக்கத்திலும் அஜித் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முதலாவதாக அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் ஏகே 63 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கங்குவா வெளியானதும் தான் ஏகே 63 அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

வாரிசு படம் வெளியானதும் உடனடியாக லியோவில் நடித்த விஜய், இப்போது தளபதி 68 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். அடுத்தடுத்து ஒரே ஆண்டில் 3 படங்களில் நடிக்கும் விஜய்க்கு ஈடு கொடுக்கவே அஜித்தும் தற்போது இரண்டு இயக்குநர்களை வளைத்துப்போட்டுள்ளாராம். இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக ஏகே 63 தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பிஸ்மி, அந்தணன் டீம் கொடுத்துள்ள அப்டேட்டால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் விடாமுயற்சி அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் அதீத நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X