அஜித் மட்டும்தான் மிஸ்சிங்.. செம க்யூட்டாக இருக்கும் ஆத்விக்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக் #KuttyThala

சென்னை: திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் இடம்பெற்றுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் ஷாலினி, ஷாலினியின் சகோதரி, ஷாலினியின் சகோதரர் என அனைவருமே உள்ளனர்.

செம க்யூட்டாக இருக்கும் ஆத்விக்கை பார்த்த அஜித் ரசிகர்கள் #KuttyThala என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பந்தா காட்டாமல்

பந்தா காட்டாமல்

தல அஜித்தின் மகன் என்றும் மகள் என்றும் எந்தவொரு பந்தாவையும் காட்டாதவாறே தனது குழந்தைகளை அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினர் வளர்த்து வருகின்றனர். முடிந்தவரை மீடியா வெளிச்சம் படாதவாறே வளர்த்து வருகின்றனர். என்னதான் மூடி மறைத்தாலும், சிங்கத்தின் குட்டி சிங்கமாகத்தானே மிளிரும்.

அஜித் மட்டும் மிஸ்சிங்

குடும்ப திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷாலினி தனது மகன் ஆத்விக் உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது சகோதரி ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி உள்ளிட்டோரும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். வலிமை ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால், தல அஜித் இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை என தெரிகிறது.

குட்டி தல

தல அஜித்தின் மகன் ஆத்விக்கின் க்யூட்டான புகைப்படத்தை மட்டும் கிராப் செய்து, ட்விட்டரில் #KuttyThala என அஜித் ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அப்பாவை போலவே ஆத்விக்கும் அழகு என்றும் எதிர்கால கோலிவுட்டின் கிங் என்றும் ஏகப்பட்ட ட்வீட்களும் கமெண்ட்டுகளும் தெறிக்கின்றன.

அப்பா போலவே

தல அஜித்தின் சிறு வயது புகைப்படத்தையும் ஆத்விக்கின் லேட்டஸ்ட் போட்டோவையும் கம்பேர் செய்து அப்படியே அப்பா போலவே குட்டி தல இருக்காருப்பா என தல ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஆத்விக் மீது கண் வைத்து வருகின்றனர். வீட்டுக்குப் போனதும் ஷாலினி மேம் பையனுக்கு சுத்திப் போட்டுடுங்க..

அதே சிரிப்பு

நடிகர் அஜித்தின் சிரிப்பை போலவே ஆத்விக்கும் செம க்யூட்டாக சிரிக்கிறார். 100 சதவீதம் அப்படியே பொருந்தி போகுது என ஏகப்பட்ட ரசிகர்கள் குட்டி தல ஆத்விக்கை கொஞ்சி வருகின்றனர். வலிமை படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் முடிய உள்ள நிலையில், அடுத்தடுத்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X