அப்பா அஜித்துக்கு கொஞ்சமும் சளைச்சவரு இல்ல மகன்.. வைரலாகும் ‘குட்டி தல’ போட்டோ!

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

Recommended Video

நடிகர் அஜித் மகன் ஆத்விக்கின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது- வீடியோ

சென்னை: நடிகர் அஜித் மகன் ஆத்விக்கின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் பொது இடங்களுக்கு தங்களது குழந்தைகளை அழைத்து வருவதில்லை. தங்களது புகழ் குழந்தைகளின் மீதும் பரவக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.

ஆனாலும், அவ்வப்போது ஷாப்பிங் சென்ற போது, விமான நிலையத்தில் என அஜித்தின் குடும்பப் புகைப்படம் வெளியாகி விடும். எளிமையை அதிகம் விரும்புவரான அஜித், செல்பி கேட்பவர்களுக்கு போஸ் தர மறுப்பதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம்.

ஆத்விக் ரசிகர்கள்:

ஆத்விக் ரசிகர்கள்:

இதனால், அப்பாவைப் போலவே மகன் ஆத்விக்கிற்கும் ஒரு ரசிகர் வட்டம் உள்ளது. எப்போதெல்லாம் அவரது புகைப்படம் வெளியாகிறதோ, அப்போதெல்லாம் அதனை வைரலாக்கி விடுகின்றனர் அஜித் ரசிகர்கள். சமீபத்தில் ஷாலினியுடன் ஷாப்பிங் சென்ற போது எடுக்கப்பட்ட ஆத்விக்கின் புகைப்படங்கள் வைரலானது.

வைரல்:

வைரல்:

இந்நிலையில் தற்போது ஆத்விக்கின் புதிய புகைப்படம் இரண்டு இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் அவர் விமானி போல உடை அணிந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்விக்கின் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை எனக் கூறப்படுகிறது.

வாழ்த்துக்கள்:

வாழ்த்துக்கள்:

மார்ச் 4ம் தேதி ஆத்விக்கின் பிறந்தநாள். அன்று 'HBD PRINCE AADVIK AJITH' என்ற ஹாஸ்டேகை டிரண்டாக்கினர் அஜித் ரசிகர்கள். அதோடு பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும் ஆத்விக்கிற்கு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.

விமானி உடை:

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அஜித்தும், படப்பிடிப்பிற்கு இடையில் தனது மகனின் பிறந்தநாளை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். அப்போது ஆத்விக் குமார் விமானி உடையணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அபிநந்தன் தாக்கம்:

அபிநந்தன் தாக்கம்:

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி, வெற்றிகரமாக இந்தியா திரும்பியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் வீரம் பற்றிய பேச்சுக்கள் இன்னமும் குறையவில்லை. அவரைப் போலவே பலரும் தங்களது மீசையை மாற்றி வருகின்றனர். அந்த தாக்கத்தில் தான் ஆத்விக்கும் தனது பிறந்தநாளுக்கு விமானி உடை அணிந்திருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

அப்பாவைப் போலவே:

அப்பாவைப் போலவே:

இந்தப் புகைப்படங்களில் அப்பாவைப் போலவே குட்டி தலயும் க்யூட்டாக, ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். குட்டி தல என்ற ஹேஷ்டேக்குடன் இந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அஜித் புகைப்படங்கள் அவரது பட அறிவிப்புகள் போலவே, அவரது மகனின் இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: ajith அஜித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X